Loading...
ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழாவில் மாற்றம்? ரஜினி பங்கேற்பதில் சிக்கலா?
'ஜெயிலர் 2' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழாவில் மாற்றம்? ரஜினி பங்கேற்பதில் சிக்கலா?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 29, 2026
07:21 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்டோபர் 15 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீடு குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமாக நடைபெறும் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவிற்கு பதிலாக, செப்டம்பர் 30 அன்று 'ஜெயிலர் 2 ரேவ்' என்ற பெயரில் ஒரு சிறப்பு இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முழுப் பாடல்களும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளன.

காரணம்

வழக்கமான விழா ரத்து செய்யப்பட்டதற்கான காரணம்

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட விழாவாக நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், போதிய மின்சார வசதி கிடைக்காத காரணத்தினாலேயே வழக்கமான விழா ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

மறுபுறம், மைசூரில் நடைபெறும் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், செப்டம்பர் 30 அன்று நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில் அவர் நேரில் கலந்துகொள்வாரா என்பதில் தொடர்ந்து நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது.

அவரது குட்டிக்கதையைக் கேட்க ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இது சிறிய ஏமாற்றத்தைத் தந்திருந்தாலும், புதிய பாடல்கள் வெளியாவது உற்சாகத்தை அளித்துள்ளது.

ADVERTISEMENT