Loading...
பரணூரில் தமிழகத்தின் முதல் பூத் இல்லாத சுங்கச்சாவடி! இனி நிக்காமல் போகலாம்
பரணூரில் தமிழகத்தின் முதல் பூத் இல்லாத சுங்கச்சாவடி

பரணூரில் தமிழகத்தின் முதல் பூத் இல்லாத சுங்கச்சாவடி! இனி நிக்காமல் போகலாம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 01, 2026
10:56 am

செய்தி முன்னோட்டம்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள பரணூர் சுங்கச்சாவடியில், தமிழ்நாட்டின் முதல் கட்டண பூத்கள் இல்லாத தானியங்கி மல்டி லேன் ஃப்ரீ ஃபுளோ (MLFF) சுங்கக் கட்டண முறை அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய அமைப்பால், வாகனங்கள் சுங்கச்சாவடியில் நிற்க வேண்டிய அவசியமின்றி வழக்கமான வேகத்திலேயே கடந்து செல்ல முடியும். கூடுதல் விபரங்கள் இங்கே:-

ANPR தொழில்நுட்பம்

கேட்களுக்கு பதிலாக அதிநவீன ரேடார் மற்றும் ANPR தொழில்நுட்பம்

மனிதர்களால் இயக்கப்படும் கட்டண பூத்கள் மற்றும் வாகனங்களைத் தடுக்கும் கேட்களுக்கு பதிலாக, சாலைக்கு மேலே உயரமான இரும்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் அதிநவீன RFID வாசகர்கள், ரேடார் ஸ்கேனர்கள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வாகனத்தின் பதிவு எண்களைத் தானாகப் படிக்கும் ANPR (Automatic Number Plate Recognition) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வாகனங்கள் சுங்கச்சாவடியை அணுகும் போதே ஃபாஸ்டேக் மூலம் தானாக கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

நிரந்தரத் தீர்வு

பண்டிகை காலப் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு

பரணூர் சுங்கச்சாவடி வழியே தினமும் சுமார் 46,500 வாகனங்கள் கடந்து செல்கின்றன.

குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் ஆயுத பூஜை, தீபாவளி போன்ற தொடர் விடுமுறை நாட்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களால் இங்கு பல கிலோமீட்டர் தூரத்திற்குக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தடையில்லா கட்டண முறையால் காத்து நிற்கும் நேரம் முற்றிலும் தவிர்க்கப்பட்டு, பயணிகள் வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும்.

ADVERTISEMENT

எச்சரிக்கை

ஃபாஸ்டேக் இல்லையெனில் சல்லான் எச்சரிக்கை

சரியான ஃபாஸ்டேக் கார்டு வைத்திருக்கும் வாகனங்கள் மற்றும் நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்கள், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களின் விலக்களிக்கப்பட்ட வாகனங்கள் எவ்விதத் தடையுமின்றி வேகமாக செல்லலாம்.

அதேவேளையில், ஃபாஸ்டேக் ஒட்டப்படாத அல்லது கணக்கில் போதுமான பண இருப்பு இல்லாத வாகனங்களின் எண்களை ANPR கேமராக்கள் துல்லியமாகப் படம்பிடித்து, அவர்களுக்கு தானாகவே அபராத சல்லான் (Challan) அனுப்பப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரித்துள்ளது.

பரணூரைத் தொடர்ந்து பிற முக்கிய சுங்கச்சாவடிகளிலும் இம்முறை விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT