மத்திய அரசு: செய்தி
நிகழ்நேர எண்ணெய்-எரிவாயுத் தரவுகளை வழங்க நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட மத்திய அரசு
மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட்போன்களில் ஆதார் ஆப்பை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்; ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆகியவை இணைந்து, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் ஆதார் சேவையை வழங்கும் 'M-Aadhaar' செயலியை கடிகாரம் அல்லது கால்குலேட்டர் போன்ற ஒரு அத்தியாவசியச் செயலியாக முன்கூட்டியே நிறுவி விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
இனி ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வண்டி மாற்றுவது ஈஸி! NOC தேவையில்லை? மத்திய அரசின் அதிரடித் திட்டம்
இந்தியாவில் வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குச் செல்பவர்கள், தங்கள் வாகனங்களை அங்கேயே பதிவு செய்ய அந்தந்த மாநில ஆர்டிஓ அலுவலகத்தில் தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெறுவது கட்டாயமாகும்.
எங்கிருந்து வேண்டுமானாலும் எரிசக்தி: போருக்கு நடுவே இந்தியாவின் அதிரடி 'பிளான் பி'
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்களை சமாளிக்க, ரஷ்யா உட்பட உலகின் எந்த சந்தையிலிருந்தும் கச்சா எண்ணெய் மற்றும் LPG திரவ எரிவாயுவை வாங்க தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போரினால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ₹500 கோடி நிவாரணத் திட்டத்தை தொடங்கியுள்ள மத்திய அரசு
மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சரக்கு அனுப்பும் தாமதங்களை ஏற்படுத்தியுள்ளது.
சைபர் உலகில் பெண்களுக்கு ஆபத்து; ஓராண்டில் 28,000 புகார்கள் அதிகரிப்பு
இந்தியாவில் 2025-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்பாக தேசிய சைபர் குற்றப் புகாரளிப்பு தளத்தில் மொத்தம் 76,657 புகார்கள் பதிவாகியுள்ளன.
விமான பயணிகள் கவனத்திற்கு! இனி சீட் புக்கிங்கிற்கு எக்ஸ்ட்ரா கட்டணம் இல்லை
அனைத்து விமானங்களிலும் குறைந்தபட்சம் 60 சதவீத இருக்கைகள், இலவசமாக தேர்ந்தெடுக்கும் வகையில் ஒதுக்கப்பட வேண்டும் என மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
சிலிண்டர் ரீஃபில் செய்யத் தடை! PNG இணைப்பு உள்ளவர்கள் உடனடியாக எல்பிஜியை சரண்டர் செய்ய வேண்டும்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் உலகளாவிய எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு எரிவாயு பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.
சோனம் வாங்சுக் விடுதலை: லடாக் வன்முறைக்குப் பிறகு தேசிய பாதுகாப்புச் சட்டக் காவல் ரத்து
லடாக் தன்னாட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த போராட்டங்களில் முன்னின்று செயல்பட்ட காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் மீதான தேசிய பாதுகாப்புச் சட்ட காவலை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சிலிண்டர் புக் பண்ண போறீங்களா? கிராமப்புறங்களுக்கு இனி 45 நாட்கள் இடைவெளி; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் எரிசக்தி தேவையைச் சீரமைக்க, சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச கால இடைவெளியை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
சிலிண்டர் தட்டுப்பாடா? யாரும் பயப்பட வேண்டாம்! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு மற்றும் புதிய கட்டுப்பாடுகள்
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக உலகளவில் எரிசக்தி சூழலில் நிச்சயமற்ற நிலை நிலவினாலும், இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் சீராக உள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
₹55இல் இருந்து ₹18,000 வரை: 1 முதல் 7வது ஊதியக் குழு வரை மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய வளர்ச்சிப் பாதை
இந்திய சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட ஊதியக் குழுக்களின் வரலாறு, கடந்த 70 ஆண்டுகளில் மத்திய அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு வதந்தி: முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு; உற்பத்தி 10% அதிகரிப்பு
இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவி வரும் செய்திகளுக்கு மத்திய அரசு இன்று (மார்ச் 10) முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு கவலையே வேண்டாம்! உங்கள் சமையல் எரிவாயுவை 30% வரை மிச்சப்படுத்த 5 சூப்பர் ஐடியாக்கள்
அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் இடையேயான போரால், இந்தியாவில் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இனி பதுக்கினால் சிறை! எல்பிஜி தட்டுப்பாட்டைச் சமாளிக்க மத்திய அரசு எடுத்த பிரம்மாஸ்திரம்; அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் சொல்வது என்ன?
இந்தியாவில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும், சீரான விநியோகத்தை உறுதி செய்யவும் மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955 ஐ செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) அன்று அமல்படுத்தியுள்ளது.
யாருக்கு கேஸ் சிலிண்டர் முதலில் கிடைக்கும்? மத்திய அரசின் புதிய 'ரேஷனிங்' முறை! முழு விவரம் இதோ
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்குள் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை முறைப்படுத்த மத்திய அரசு 'இயற்கை எரிவாயு (விநியோக ஒழுங்குமுறை) ஆணை, 2026' ஐப் பிறப்பித்துள்ளது.
தவறு நடந்துவிட்டது! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது NCERT; எட்டாம் வகுப்பு பாடப்புத்தங்கள் வாபஸ்
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து இடம் பெற்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) இன்று நாளிதழ்களில் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரியுள்ளது.
உணவு விநியோகம் முடங்கும் அபாயம்! பிரதமருக்கு சென்னை ஹோட்டல்கள் சங்கம் அவசரக் கடிதம்; முழு விவரம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் இந்தியாவில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகம் பல இடங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு இந்தியரையும் காப்பதே இலக்கு! ஈரான் போர்க்களத்திலிருந்து தப்பிய 67,000 பேர்; மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (மார்ச் 9) மாநிலங்களவையில் விரிவான விளக்கமளித்தார்.
இந்திய அணுசக்தி துறையில் வரலாற்றுச் சாதனை: முதல் பெண் தலைவராக தமிழக பெண் ஆர்.எம். நாச்சம்மை நியமனம்
இந்தியாவின் அணுசக்தித் திட்ட வரலாற்றில் ஒரு மகத்தான தருணமாக, செயல்பாட்டில் உள்ள ஒரு அணுமின் நிலையத்தின் செயல்பாடுகளைக் கவனிக்கும் முதல் பெண் தலைமை கண்காணிப்பாளராக ஆர்.எம்.நாச்சம்மை நியமிக்கப்பட்டுள்ளார்.
சிக்கன் நெக் பகுதியில் புதிய யூனியன் பிரதேசமா? தீயாய் பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு
பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சில மாவட்டங்களை ஒன்றிணைத்து புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை மத்திய அரசு சனிக்கிழமை (மார்ச் 7) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
'நாங்க யார்கிட்டயும் பர்மிஷன் கேட்கல!' ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா கொடுத்த கெத்தான பதில்
ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை (மார்ச் 7) தெரிவித்துள்ளது.
சாமானியர்களுக்குப் பெரும் சுமை! வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.60 மற்றும் வணிக சிலிண்டர் ரூ.115 அதிகரிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கமேனியை வீழ்த்திய இஸ்ரேலிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்த இந்தியா திட்டம்?
பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான தாக்குதலில் இஸ்ரேலின் 'புளூ ஸ்பாரோ' ஏவுகணை முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
8வது ஊதியக் குழு: இது மட்டும் நடந்தால் ஊதியம் 3 மடங்கிற்கும் மேல் அதிகரிக்கும்?
8வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் போது ஃபிட்மென்ட் ஃபேக்டர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
வருமான வரித் தவறுகளைத் திருத்த மார்ச் 31 வரை அவகாசம்
வருமான வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், தாக்கல் செய்யப்பட்ட வரி அறிக்கையில்(ITR) உள்ள தவறுகளை திருத்தி மீண்டும் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மார்ச் 31 வரை நீட்டிக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
மத்திய கிழக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தீவிரம்
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அங்கு சிக்கியுள்ள இந்திய சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக மீட்கும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
நீங்கள் இந்த ஆன்டிவைரஸ் மென்பொருள் பயன்படுத்துகிறீர்களா? ஹேக்கர்கள் ஊடுருவ வாய்ப்பு; மத்திய அரசு அவசர எச்சரிக்கை
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசர காலப் பதிலளிப்புக் குழு (CERT-In), பிரபல ஆன்டிவைரஸ் மென்பொருளான டிரெண்ட் மைக்ரோ அபெக்ஸ் ஒன் (Trend Micro Apex One) குறித்து மிக முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இனி வண்டி ஓட்டும்போது உஷார்! ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யப்போகும் புதிய பாயிண்ட் சிஸ்டம் விரைவில் அறிமுகம்
இந்தியாவில் சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்க மத்திய அரசு ஒரு புரட்சிகரமான பாயிண்ட் அடிப்படையிலான ஓட்டுநர் உரிம முறையை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமா?
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் சனிக்கிழமை மூடியது.
இந்தியாவில் வாட்ஸ்அப் வெப் முடக்கம்! 6 மணி நேரத்திற்கு ஒருமுறை 'லாக் அவுட்' ஆவதாக புகார்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி இன்று காலை 9:16 மணி முதல் இந்தியாவில் பல்வேறு இடங்களில் முடங்கியுள்ளது.
பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி: இந்தியாவின் முதல் தேசிய கொள்கை 'PRAHAAR' வெளியீடு
இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாடு முழுவதும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான முதல் விரிவான கொள்கையான 'பிரகார்' (PRAHAAR)-ஐ மத்திய அரசு இறுதி செய்துள்ளது.
8வது ஊதியக் குழு: புதிய ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும்? முழு விவரங்கள்
7வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் 2025 டிசம்பர் 31 உடன் முடிவடைந்துள்ளது. எனவே, 8வது ஊதியக் குழுவின் புதிய ஊதிய விகிதங்கள் ஜனவரி 1, 2026 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது.
புதிய வருமான வரி சட்டம் 2025: டிஜிட்டல் சோதனைகள் குறித்து பிரிவு 247 கூறுவது என்ன?
மத்திய அரசு 64 ஆண்டுகள் பழமையான 1961 ஆம் ஆண்டின் வருமான வரி சட்டத்திற்குப் பதிலாக, வருமான வரிச் சட்டம் 2025 என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
அதீத வரவேற்பு காரணமாக மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படும் இந்திய AI தாக்க உச்சி மாநாடு
இந்திய அரசாங்கம் AI தாக்க உச்சி மாநாடு 2026 ஐ ஒரு நாள் நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் புதிய ஐடி விதிமுறையால் கிரியேட்டர்கள் ஷாக்; வருவாய் இழப்பு குறித்து அச்சம்
இந்தியாவில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் சட்டவிரோதமான அல்லது தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு புதிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
விபத்தில் சிக்கினால் ரூ.1.5 லட்சம் இலவச சிகிச்சை பெறுவது எப்படி? பிஎம் ராகத் திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் நடைமுறை
மத்திய அரசின் பிஎம் ராகத் (PM RAHAT) திட்டத்தின் கீழ், இந்தியாவில் எந்தவொரு சாலையில் விபத்துக்குள்ளாகும் நபரும் தகுதியுடையவர் ஆவார்.
அடிமைத்தன அடையாளங்களுக்கு குட்பை; ராஜ்பத் முதல் முகலாயத் தோட்டம் வரை; மோடி ஆட்சியில் உருமாறிய இந்தியாவின் முக்கிய இடங்கள்
பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு பொறுப்பேற்றது முதல், இந்தியாவின் அடிமைத்தன அடையாளங்களை அகற்றி, தேசத்தின் கலாச்சாரம் மற்றும் வீரத்தைப் பறைசாற்றும் நோக்கில் ஒரு மிகப்பெரிய பெயர் மாற்றத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
ராகுல் காந்தியின் MP பதவியை நீக்க கோரி தீர்மானம் கொண்டுவந்த பாஜக MP
மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்.பி. நிஷிகாந்த் துபே ஒரு முக்கிய தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.
ஏர் இந்தியா விபத்து, தொழில்நுட்ப கோளாறு அல்ல; வேண்டுமென்றே செய்யப்பட்டது: அறிக்கை
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தை விசாரித்த புலனாய்வாளர்கள், இந்த சம்பவம் "வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல்" என்றும், தொழில்நுட்ப கோளாறு அல்ல என்றும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.