LOADING...
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு வதந்தி: முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு; உற்பத்தி 10% அதிகரிப்பு
எல்பிஜி தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு விளக்கம்

எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு வதந்தி: முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு; உற்பத்தி 10% அதிகரிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 10, 2026
07:45 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவி வரும் செய்திகளுக்கு மத்திய அரசு இன்று (மார்ச் 10) முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நாட்டில் எரிவாயு விநியோகம் சீராக உள்ளதாகவும், தட்டுப்பாடு குறித்த கவலைகள் தேவையற்றவை என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் பலன் அளிக்கத் தொடங்கியுள்ளன. அரசு உத்தரவின் பேரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் எல்பிஜி உற்பத்தி சுமார் 10% அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் உள்ள அனைத்து சுத்திகரிப்பு ஆலைகளும் 100% முழுத் திறனுடன் இயங்கி வருகின்றன. சிலிண்டர் பதுக்கல் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்க, விநியோகக் கண்காணிப்புக் காலம் 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

சட்டம்

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் அமல்

சீரான விநியோகத்தை உறுதி செய்ய அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும், அத்தியாவசியப் பணிகள் பராமரிப்புச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். சமூக வலைதளங்களில் பரவும் சரிபார்க்கப்படாத தகவல்களை நம்பி பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சாமானிய மக்களின் சமையல் எரிவாயுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கே அரசு முதலிடம் அளிக்கிறது. உலகளாவிய போர்ச் சூழலிலும் இந்தியாவின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யப் பிற நாடுகளுடன் மத்திய அமைச்சகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. "தற்காலிகமாகச் சில கவலைகள் எழுந்தன, ஆனால் தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் உள்ளது. மற்ற நாடுகளை விட இந்தியா எரிசக்தி மேலாண்மையில் சிறந்த நிலையில் உள்ளது" என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement