வருமான வரித் தவறுகளைத் திருத்த மார்ச் 31 வரை அவகாசம்
செய்தி முன்னோட்டம்
வருமான வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், தாக்கல் செய்யப்பட்ட வரி அறிக்கையில்(ITR) உள்ள தவறுகளை திருத்தி மீண்டும் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மார்ச் 31 வரை நீட்டிக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. 2026-27 பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போதைய விதிகளின்படி, வரி அறிக்கையில் ஏதேனும் தவறு இருந்தால் அதைச் சரிசெய்ய அந்த நிதியாண்டின் டிசம்பர் 31 வரை மட்டுமே அவகாசம் இருந்தது. ஆனால், இனி வரும் காலங்களில் இதை மார்ச் 31 வரை நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31-க்கு பிறகு அறிக்கையை திருத்தினால், 5 லட்சத்திற்குள் வருமானம் உள்ளவர்கள் 1,000 ரூபாயும், அதற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 5,000 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
அட்டவணை
முன்பண வரி அட்டவணை
ஒருவருடைய ஆண்டு வரிப் பொறுப்பு (Tax Liability) 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், அவர் 'முன்பண வரி' செலுத்த வேண்டும். இது நான்கு தவணைகளாக பிரிக்கப்பட்டுள்ளது: ஜூன் 15: மொத்த வரியில் 15% செப்டம்பர் 15: 45% வரை டிசம்பர் 15:** 75% வரை மார்ச் 15: 100% முழுமையாக செலுத்த வேண்டும்.
காலக்கெடு
காலக்கெடுவை தவறவிட்டால் என்ன நடக்கும்?
முன்பண வரியை சரியான நேரத்தில் செலுத்தத் தவறினால், வருமான வரிச் சட்டத்தின் கீழ் (பிரிவு 234B மற்றும் 234C) மாதம் 1% வட்டி அபராதமாக விதிக்கப்படும். வரி செலுத்தும் நடைமுறைகளை எளிதாக்கவும், டிஜிட்டல் முறைக்கு வரி செலுத்துவோர் எளிதாக மாறவும் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.