LOADING...
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு கவலையே வேண்டாம்! உங்கள் சமையல் எரிவாயுவை 30% வரை மிச்சப்படுத்த 5 சூப்பர் ஐடியாக்கள்
எல்பிஜி சிலிண்டர் நீண்ட நாட்களுக்கு சிக்கனமாக பயன்படுத்துவதற்கான 5 ஸ்மார்ட் டிப்ஸ்

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு கவலையே வேண்டாம்! உங்கள் சமையல் எரிவாயுவை 30% வரை மிச்சப்படுத்த 5 சூப்பர் ஐடியாக்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 10, 2026
06:17 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் இடையேயான போரால், இந்தியாவில் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அவசர கதியில் எடுத்து வருகிறது. அதன்படி, எரிவாயுவிற்கு விநியோகக் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், பொதுமக்களாகிய நாமும் பயன்படுத்தும் சிலிண்டரை சிக்கனமாகப் பயன்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. உங்கள் சமையல் அறையில் நீங்கள் செய்யும் சிறிய மாற்றங்கள், சிலிண்டரின் ஆயுளைக் கணிசமாக நீட்டிக்க உதவும். அவ்வாறு உதவும் 5 எளிய மாற்றங்களை இதில் தெரிந்து கொள்ளலாம்.

தயார் நிலை

சமையலுக்கு முன் அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருங்கள்

அடுப்பை ஆன் செய்த பிறகு காய்கறிகளை நறுக்குவது அல்லது மசாலாக்களைத் தேடுவது அதிக எரிவாயுவை வீணாக்கும். சமைக்கத் தேவையான அனைத்துப் பொருட்களையும் (நறுக்கிய காய்கறிகள், மசாலா, ஊறவைத்த பருப்பு) அடுப்புக்கு அருகிலேயே தயாராக வைத்துவிட்டுப் பிறகு அடுப்பைப் பற்ற வையுங்கள்.

மூடி வைத்தல்

மூடி வைத்துச் சமைக்கவும்

பாத்திரங்களைத் திறந்த நிலையில் வைத்துச் சமைக்கும்போது, வெப்பம் ஆவியாக வெளியேறி சமையல் நேரத்தை அதிகமாக்கும். பாத்திரங்களை மூடி வைத்துச் சமைப்பதன் மூலம் நீராவி உள்ளேயே தங்கி, உணவை விரைவாக வேகவைக்கும். இது சுமார் 15% முதல் 20% எரிவாயுவை சேமிக்க உதவும்.

Advertisement

ஊற வைத்தல்

பருப்பு மற்றும் தானியங்களை ஊற வைக்கவும்

பருப்பு, அரிசி அல்லது கொண்டைக்கடலை போன்ற கடினமான பொருட்களைச் சமைப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே தண்ணீரில் ஊற வைக்கவும். இப்படிச் செய்வதால் அவை மென்மையாகும், இதனால் அடுப்பில் வேகும் நேரம் பாதியாகக் குறையும்.

Advertisement

பிரஷர் குக்கர்

பிரஷர் குக்கரைப் பயன்படுத்துங்கள்

சாதாரணப் பாத்திரங்களை விட பிரஷர் குக்கரில் சமைப்பது எரிவாயுவைச் சேமிக்க மிகச் சிறந்த வழியாகும். இது உணவை மிக விரைவாக வேகவைப்பதோடு, சத்துக்களும் வீணாகாமல் பாதுகாக்கிறது. குறிப்பாகக் காய்கறிகள் மற்றும் இறைச்சி சமைக்கக் குக்கரைப் பயன்படுத்துவது அதிக லாபகரமானது.

பர்னர்

பர்னரைச் சுத்தமாக வைத்திருங்கள்

உங்கள் அடுப்பின் பர்னரில் ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறச் சுடர் வருகிறதா? அப்படியென்றால் பர்னர் துளைகளில் அடைப்பு இருக்கிறது என்று அர்த்தம். இது அதிக எரிவாயுவை வீணாக்கும். பர்னரைத் தொடர்ந்து சுத்தப்படுத்துவதன் மூலம் நீல நிறச் சுடர் வருவதை உறுதி செய்யுங்கள். இதுவே எரிவாயு முழுமையாக எரிந்து சரியான வெப்பத்தைத் தருகிறது என்பதற்கான அறிகுறி.

Advertisement