LOADING...
கமேனியை வீழ்த்திய இஸ்ரேலிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்த இந்தியா திட்டம்?
இந்தியா தனது வான்வழித் தாக்குதல் திறனை மேம்படுத்த தீவிரமாக தயாராகி வருகிறது

கமேனியை வீழ்த்திய இஸ்ரேலிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்த இந்தியா திட்டம்?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 06, 2026
05:57 pm

செய்தி முன்னோட்டம்

பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான தாக்குதலில் இஸ்ரேலின் 'புளூ ஸ்பாரோ' ஏவுகணை முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியா தனது வான்வழித் தாக்குதல் திறனை மேம்படுத்த தீவிரமாக தயாராகி வருகிறது. வளிமண்டலத்தின் விளிம்பு வரை சென்று, அங்கிருந்து இலக்கை நோக்கி ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் பாயும் திறன் கொண்டதால் இது "விண்வெளியிலிருந்து வரும் ஏவுகணை" என அழைக்கப்படுகிறது. இஸ்ரேலிய எஃப்-15 அல்லது எஃப்-35 போர் விமானங்களில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள், சுமார் 1,000 கி.மீ தூரத்திற்கு அப்பால் உள்ள ஈரானிய தலைநகர் டெஹ்ரானில் கமேனி தங்கியிருந்த அறையைத் துல்லியமாக தாக்கியுள்ளன.

ROCKS

இந்தியாவின் கையில் இஸ்ரேலியத் தொழில்நுட்பம்: ROCKS மற்றும் Golden Horizon

இஸ்ரேலின் இந்த அதிரடி தொழில்நுட்பத்தை இந்திய விமானப்படை தனது சுகோய் Su-30MKI போர் விமானங்களில் ஒருங்கிணைத்து வருகிறது ROCKS(Crystal Maze 2): புளூ ஸ்பாரோ ஏவுகணையின் ஒரு வடிவம் இது. 2024 ஏப்ரலில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சுகோய் விமானத்திலிருந்து இது வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. 250 கி.மீ-க்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் எல்லை தாண்டாமலேயே எதிரி நாட்டுத் தளங்களை அழிக்க முடியும். Golden Horizon: 1,500 முதல் 2,000 கி.மீ வரை பாயும் திறன் கொண்ட இந்த அதிநவீன ஏவுகணையை இந்தியாவுக்கு வழங்க இஸ்ரேல் முன்வந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தின் போது இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

ஆத்மநிர்பர் பாரத்

இந்த ஏவுகணைகளை இந்தியாவிலேயே தயாரிக்க திட்டம்

2025 மே மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் இஸ்ரேலிய ஆயுதங்கள் பெரும் வெற்றியைத் தந்தன. ஹார்பி (HARPY) மற்றும் ஹாரோப் (Harop) ட்ரோன்கள் பாகிஸ்தானின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் ரேடார்களை அழித்தன. SPICE கிட்கள்,சாதாரண குண்டுகளைத் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளாக மாற்ற இவை உதவின. பராக்-8, வான்வழித் தாக்குதலில் இருந்து இந்தியப் பாதுகாப்புக் கவசமாகச் செயல்பட்டது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "களத்தில் சோதிக்கப்பட்ட" தங்களது ஆயுதங்கள் இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டதாகப் பாராட்டியுள்ளார். 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்தின் கீழ், இந்த ஏவுகணைகளை இந்தியாவிலேயே தயாரிக்கவும் (Make in India) மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement