இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
கனமழை எதிரொலி: பூண்டி ஏரியில் நீர்திறப்பு அதிகரிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை!
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியின் நீர்வரத்து அதிகரித்து, உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் கருத்தால் புதிய சர்ச்சை; பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொள்ளும் என பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை அடுத்து, வியாழக்கிழமை (அக்டோபர் 16) அன்று அரசியல் ரீதியிலான சர்ச்சை வெடித்தது.
சபரிமலை கோவில் மாதாந்திர பூஜைக்காக அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்படுகிறது
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைகளுக்காக அக்டோபர் 17 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்.
தென் மாவட்டங்களில் கனமழை தொடர்கிறது; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று முதல் வடகிழக்குப் பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
முன்பதிவு பெட்டிகளில் சட்டவிரோதமாக பயணிக்கும் பயணிகளை கட்டுப்படுத்த தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி, சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கான நிதி உதவியை 100% உயர்த்த பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
முன்னாள் ராணுவ வீரர்கள் (ESM) மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்களுக்கு கேந்திரிய சைனிக் வாரியம் மூலம் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை செயல்படுத்தும் திட்டங்களின் கீழ் 100% நிதி உதவியை அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தி விளம்பரங்கள், திரைப்படங்கள், பாடல்களை தடை செய்ய தமிழக அரசு முடிவு?
தமிழ்நாட்டில் இந்தி மொழித் திணிப்பு தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் விளம்பரப் பலகைகள், திரைப்படங்கள் மற்றும் பாடல்களில் இந்தி மொழியைப் பயன்படுத்துவதை தடை செய்யும் மசோதாவை தமிழக அரசு இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(அக்டோபர் 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கோவா முன்னாள் முதல்வர் மற்றும் வேளாண் துறை அமைச்சராக இருந்த ரவி நாயக் காலமானார்
கோவா மாநில வேளாண் துறை அமைச்சராகவும், மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்த மூத்த அரசியல் தலைவர் ரவி நாயக், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 79.
சென்னையில் மாறிய வானிலை; அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்
தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
ஜெய்சால்மர் பேருந்து தீ விபத்து கோரம்: 20 பேர் உயிருடன் கருகி உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரிலிருந்து ஜெய்சால்மருக்கு சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 20 பேர் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர், மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையன்று பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதற்கு, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) அறிவித்துள்ளது.
Coldrif இருமல் மருந்து சர்ச்சை: கைது செய்யப்பட்ட மருத்துவருக்கு, ஒவ்வொரு கோல்ட்ரிஃப் சிரப்பிற்கும் 10% கமிஷன்
மத்தியப் பிரதேச மாநிலம், பராசியாவில் உள்ள அரசு சுகாதார மையத்தில் குழந்தை மருத்துவரான டாக்டர் பிரவீன் சோனி, அக்டோபர் 4 ஆம் தேதி Coldrif என்ற நச்சு இருமல் சிரப்பை பரிந்துரைத்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.
உத்தரகாண்டில் மர்ம காய்ச்சலுக்கு 10 பேர் பலி!
உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மற்றும் ஹரித்வார் மாவட்டங்களில் கடந்த பதினைந்து நாட்களில் ஒரு மர்ம காய்ச்சலுக்கு 10 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் (அக்டோபர் 16 அல்லது 17) வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.
"சந்தேகம் இருந்தாலே அரசு நிறுவனங்களில் சோதனை செய்வீர்களா?": TASMAC வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) மேற்கொண்ட சோதனை மற்றும் ஆவணங்கள் பறிமுதலுக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறைக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியது.
எல்லை கட்டுப்பாடு கோடு அருகே ஊடுருவலை ராணுவம் முறியடித்ததில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா பகுதியில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்ததில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
TVK கரூர் நெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யை சந்தித்தாக தகவல்
கரூரில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் நேற்று இரவு தவெக தலைவர் விஜய்யை சந்தித்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
கோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிணைக்கைதிகள் விடுதலையை வரவேற்றார் பிரதமர் மோடி; டிரம்ப் மற்றும் நெதன்யாகுவின் அமைதி முயற்சிக்கு பாராட்டு
இரண்டாண்டுகளுக்கும் மேலாக ஹமாஸால் பிணைக்கைதிகளாக இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (அக்டோபர் 13) வரவேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு; மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொடங்க திட்டம்
இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகள், தங்களுக்கு இடையேயான பதட்டமான உறவுகளைச் சீரமைப்பதற்கான லட்சியமான புதிய செயல் திட்டத்தை வகுத்துள்ளன.
TVK கரூர் நெரிசல் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின், தனி நபர் ஆணையம் மற்றும் SIT நிலைமை என்ன?
கரூரில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துக்கான அரசாணை வெளியிட்டது தமிழக பள்ளிக் கல்வித் துறை
தமிழ்நாடு அரசு, மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, நடப்பு கல்வியாண்டு (2025-26) முதல் 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வை ரத்து செய்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை மேற்பார்வையிடும் முன்னாள் நீதிபதிக்கும் ஜல்லிக்கட்டுக்கு இப்படியொரு தொடர்பா? முழு விபரம்
கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்; 4 நாட்கள் நடைபெறுகிறது
தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், சபாநாயகர் அப்பாவு, செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.
லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாயும் IRCTC ஊழல், மோசடி வழக்குகள்
IRCTC ஊழல் வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது டெல்லி நீதிமன்றம் பல்வேறு குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
திரிபுரா: தாய்மாமனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 14 மாத குழந்தை
வடக்கு திரிபுரா மாவட்டத்தின் பனிசாகர் துணைப்பிரிவில், அக்டோபர் 11 ஆம் தேதி 14 மாத குழந்தை தனது தாய் வழி மாமாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை(அக்டோபர் 14) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
TVK கரூர் நெரிசல் விவகாரத்தில் CBI விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்
கரூரில் நடந்த TVK கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ (CBI) விசாரணைக்கு உத்தரவு வழங்கியுள்ளது.
சென்னையில் மருந்து ஆய்வாளர் மற்றும் Coldrif உரிமையாளர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
வட இந்தியாவில் Coldrif இருமல் மருந்தை பயன்படுத்திய 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை (ED) சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
"வருமானம் பத்தலைங்க!": மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்த நடிகர் சுரேஷ் கோபி
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஞாயிற்றுக்கிழமை தனது அமைச்சர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்ததோடு, பாஜகவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சி சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சரவையில் தனக்குப் பதிலாக நியமிக்க பரிந்துரைத்தார்.
இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல்; தொகுதி பங்கீட்டை முடித்தது தேசிய ஜனநாயகக் கூட்டணி; எந்த கட்சி எத்தனை இடங்களில் போட்டி?
வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி பரஸ்பர ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக இறுதி செய்துள்ளது.
பிஎஸ்எஃப் விமானப் பிரிவில் முதல் பெண் விமானப் பொறியாளர்; இன்ஸ்பெக்டர் பாவ்னா சௌத்ரி தேர்வில் தேர்ச்சி
எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) விமானப் பிரிவின் வரலாற்றில் முதல் பெண் விமானப் பொறியாளராக இன்ஸ்பெக்டர் பாவ்னா சௌத்ரி இடம்பிடித்து ஒரு முக்கியச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பெண் கல்வி ஹராம் அல்ல; பெண் பத்திரிகையாளர் அனுமதிக்கப்படாதது குறித்து ஆப்கான் வெளியுறவு அமைச்சர் விளக்கம்
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி, தனது முந்தைய ஊடக சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களைப் புறக்கணித்தமைக்காகப் பரவலான கண்டனங்களை எதிர்கொண்ட பின்னர், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) புதுடெல்லியில் இரண்டாவது பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.
இளம் பெண்கள் இரவில் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாதா? மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்தால் சர்ச்சை
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் 23 வயது மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பின்னர் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார்.
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தவறுக்காக உயிரையே கொடுத்தார் இந்திரா காந்தி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் இருந்து பிரிவினைவாதிகளை அகற்றுவதற்கான தவறான வழியாக ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் மாறியதாக விவரித்துள்ளார்.
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக பொறுப்பேற்கும் செர்ஜியோ கோர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராகப் பதவியேற்கவுள்ள செர்ஜியோ கோர், வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை சனிக்கிழமை (அக்டோபர் 11) புது டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் (MEA) சந்தித்தார்.
சர்வதேச பெண் குழந்தைகள் தினம்: இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான முக்கியத் திட்டங்கள்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம், பெண்களை மேம்படுத்துவதன் மற்றும் பாலின சமத்துவத்தை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
சமையல் எரிவாயு டேங்கர் லாரி வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி இந்தியன் ஆயில் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு
சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் நடத்திவரும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசிஎல்) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.