LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

01 Nov 2025
ஆந்திரா

ஆந்திர கோவில் கூட்ட நெரிசலில் 10 பேர் பலி: தகவல் தெரிவிக்காததே காரணம்; முதல்வர் பேட்டி

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்காவில் இருக்கும் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் கார்த்திகை ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.

இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027: டிஜிட்டல் முறையில் நவம்பர் 1 முதல் சுய பதிவு செய்யலாம்

இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027க்கான ஆயத்தப் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

01 Nov 2025
சென்னை

தாயுமானவர் திட்டம்: நவம்பர் 3 முதல் சென்னை முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்

தமிழக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், சென்னை மாநகரத்தில் உள்ள 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

01 Nov 2025
ஆந்திரா

ஆந்திரப் பிரதேச கோவிலில் சோகம்: ஏகாதசி கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல பக்தர்கள் பலி

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் இருக்கும் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் (Stampede) சிக்கிப் பல பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

01 Nov 2025
அதிமுக

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர செங்கோட்டையன் முடிவு; ஈபிஎஸ் மீது கடும் விமர்சனம் 

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது நீக்கம் வேதனையளிப்பதாகவும், இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகவும் சனிக்கிழமை (நவம்பர் 1) ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

01 Nov 2025
கேரளா

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 'கடுமையான வறுமையற்ற மாநிலம்' என கேரளாவை அறிவித்தார் முதல்வர் பினராயி விஜயன்

மாநில உருவாக்க தினமான சனிக்கிழமை (நவம்பர் 1) அன்று, கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநிலத்தை அதிகாரப்பூர்வமாக கடுமையான வறுமையற்ற மாநிலம் (Extreme Poverty-Free) என்று அறிவித்து, மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

01 Nov 2025
கல்வி

12ஆம் வகுப்பு மாணவர்களே அலெர்ட்; ஜேஇஇ முதன்மைத் தேர்வு 2026க்கான விண்ணப்பம் தொடக்கம்

இந்தியாவின் முதன்மையானப் பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ முதன்மைத் தேர்வு (JEE Main) 2026 ஜனவரிப் பதிவிற்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

சீனா எல்லைப் பகுதியில் தயார்நிலை: வடகிழக்கு மாநிலங்களில் இந்திய விமானப்படைப் பயிற்சி - NOTAM அறிவிப்பு வெளியீடு 

இந்திய விமானப்படை (IAF), சீனா, பூடான், மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் எல்லையைப் பகிரும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் ஒரு பெரிய அளவிலானப் பயிற்சிக்காக NOTAM (Notice to Airmen) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

31 Oct 2025
அதிமுக

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்; எடப்பாடி பழனிச்சாமி அதிரடி

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் கூறி, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அறிவித்துள்ளார்.

31 Oct 2025
தமிழகம்

மாணவர்களுக்கு குட் நியூஸ்? தேர்தலுக்கு முன்பாக இலவச லேப்டாப்களை வழங்க தமிழக அரசு திட்டம் என தகவல்

தமிழகத்தில் உள்ள சுமார் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் மாநில அரசின் முக்கியத் திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

31 Oct 2025
கடற்படை

ஒரு அம்பு இரண்டு இலக்குகள்; சீனா மற்றும் பாகிஸ்தானை ஒரே நேரத்தில் சமாளிக்க தயார் நிலையில் இந்திய கடற்படை

இந்தியப் பெருங்கடல் பகுதியில் நுழையும் சீனக் கப்பல்கள் உட்பட அனைத்துக் கப்பல்களையும் இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கடற்படை துணை அட்மிரல் சஞ்சய் வத்சாயன் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) தெரிவித்தார்.

31 Oct 2025
இந்தியா

பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய சகாப்தம்: இந்தியா-அமெரிக்கா இடையே 10 ஆண்டு ராணுவ உடன்பாடு கையெழுத்து

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இருதரப்பிற்கும் இடையிலான 10 ஆண்டுக்கானப் பாதுகாப்பு உடன்படிக்கை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அன்று கையெழுத்தானது.

31 Oct 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 1) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவம்பர் 1) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அதிக மழைப்பொழிவைத் தரும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்துக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகி வருகின்றன.

31 Oct 2025
தேர்தல்

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ₹9,000 நிதி; ஆளும் கட்சியின் தேர்தல் வாக்குறுதி

பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான (243 இடங்கள்) தனது சங்கல்ப பத்திரத்தை (தேர்தல் அறிக்கை) தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) பாட்னாவில் வெளியிட்டது.

பிப்ரவரி 17 முதல் பொதுத்தேர்வு; 10, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது சிபிஎஸ்இ

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 2026ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கான இறுதித் தேர்வுக் கால அட்டவணையை (Date Sheet) வெளியிட்டுள்ளது.

நாட்டின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்தை நியமனம் செய்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

இந்திய உச்ச நீதிமன்றத்தின் அடுத்தத் தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் அவர்களைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று அறிவித்தார்.

ரிஷிகேஷில் கங்கையின் குறுக்கே கண்ணாடி தொங்கு பாலம் அமைப்பு; இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் நகரில், புனித நதியாக போற்றப்படும் கங்கை ஆற்றின் குறுக்கே பிரம்மாண்டமான கண்ணாடித் தொங்கு பாலமான பஜ்ரங் சேது (Bajrang Setu) விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: தீவிரவாதத் தொடர்பு காரணமாக ஜம்மு காஷ்மீரில் இரண்டு அரசு ஆசிரியர்கள் பணி நீக்கம்

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தீவிரவாதச் செயல்பாடுகள் மற்றும் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு அரசு ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்கி, தேசியப் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இனி வாக்காளர்களுக்கு கவலையில்லை; Book-a-Call with BLO வசதியை தொடங்கியது தேர்தல் ஆணையம்

இந்தியாவின் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ள சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணிக்காக, 2002 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலை அடிப்படை ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

30 Oct 2025
கல்லூரி

நாமக்கல் தனியார் கல்லூரி விடுதி சம்பவத்தில் சிலர் உயிரிழந்ததாக வதந்தி பரப்புபவர்களுக்கு காவல்துறை கடும் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் உணவருந்திய மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, சிலர் உயிரிழந்ததாகச் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தவறான தகவல்கள் தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேவர் ஜெயந்தி: முதல்வர் ஸ்டாலின், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பசும்பொன்னில் மரியாதை!

தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா இன்று (அக்டோபர் 30, 2025) இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கோலாகலமாக அனுசரிக்கப்பட்டது.

29 Oct 2025
இந்தியா

நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுவதால் முக்கிய இந்திய நகரங்கள் மூழ்கி வருகின்றன: ஆய்வு

இந்தியாவின் முக்கிய நகரங்களில் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதால் நிலம் குறைந்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி திரௌபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார்

ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து புதன்கிழமை ரஃபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு புறப்பட்டார்.

'வேலைக்கு பணம்' மோசடி: ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய அமைச்சர் கே.என். நேருவுக்கு புதிய சிக்கல்!

தமிழகத்தில் புதிதாக 'வேலைக்கு பணம்' மோசடி நடந்திருப்பதாக கூறி, அதுகுறித்து உடனடியாக விசாரிக்குமாறு மாநில காவல் துறைக்கு, அமலாக்கத்துறை (ED) கடிதம் எழுதியுள்ளது.

29 Oct 2025
டெல்லி

ஈரான், பாகிஸ்தான் தொடர்புகள் கொண்ட 'உளவாளி'யை டெல்லி போலீசார் கைது செய்தனர்

உளவு பார்த்தல் மற்றும் போலி பாஸ்போர்ட் மோசடி நடத்திய குற்றச்சாட்டில் முகமது அடில் ஹுசைனி என்ற 59 வயது நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

'மோந்தா' புயல் ஆந்திராவில் கரையை கடந்தது! தமிழகத்தில் மழை நீடிக்குமா?

வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயலான 'மோந்தா' (Montha), நேற்று நள்ளிரவுக்கு பிறகு ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக்டோபர் 29, 2025) அதிகாலை அறிவித்துள்ளது.

வானிலை அறிக்கை: இந்த வாரம் முழுக்க தமிழகம் மற்றும் புதுவைக்கு மிதமழை உண்டு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் நவம்பர் 3 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8th pay commission அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: 18 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்காக காத்திருந்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

28 Oct 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் இன்று (அக்டோபர் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(அக்டோபர் 29) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

28 Oct 2025
விஜய்

தி.மு.க. ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: TVK விஜய் சவால் அறிக்கை

தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவரும் நடிகருமான விஜய், ஆளும் திமுக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில்ஆட்சியாளர்களை மாற்றுவது உறுதி என்று சவால் விடுத்துள்ளார்.

28 Oct 2025
சென்னை

Montha புயல்: சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும்

வங்காள விரிகுடாவில் மோந்தா புயல் தீவிரமடைந்து வருகிறது.

28 Oct 2025
சென்னை

சென்னை ஏர்போர்ட் அருகே இருந்த பிரபல தனியார் ஹோட்டலை சீல் வைத்த அதிகாரிகள்

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையின் மூலம், சென்னை ஆலந்தூர் பகுதியில் சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்டு அரசு நிலம் இன்று மீட்கப்பட்டது.

28 Oct 2025
டெல்லி

டெல்லி ஆசிட் வீச்சு வழக்கில் அதிர்ச்சி திருப்பம்: தந்தையே போட்ட ஸ்கெட்ச்

டெல்லியில் 20 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை ஆந்திரா கடற்கரையை கடக்கும் 'மோந்தா' புயல்: தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், தீவிர புயலாக வலுவடைந்து இன்று மாலை ஆந்திரா மாநிலத்தின் காகிநாடா அருகே கரையை கடக்க உள்ளது.

27 Oct 2025
ஹரியானா

ஹரியானா மாணவர் தற்கொலை; சகோதரிகளின் ஏஐ ஆபாசப் படங்களைக் காட்டி மிரட்டியதால் விபரீதம் 

ஹரியானாவின் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 19 வயதுக் கல்லூரி மாணவர் ஒருவர், தனது மூன்று சகோதரிகளின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டி மிரட்டப்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.

27 Oct 2025
வாக்காளர்

12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு எப்படி நடக்க போகிறது, தெரிந்து கொள்ளுங்கள்

இந்தியாவின் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல்களைத் திருத்தி, புதுப்பிக்கும் பணியின் இரண்டாம் கட்டத்தை (Special Intensive Revision - SIR) எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்த விரிவான அறிக்கையைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் முழுவதும் நிறைவு; நவம்பர் 25 அன்று கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி

அயோத்தியின் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை திங்களன்று (அக்டோபர் 27), பிரதான ராமர் கோயில் தொடர்பான அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

27 Oct 2025
வாக்காளர்

தமிழக வாக்காளர்களே அலெர்ட்... SIR திருத்தத்தில் இந்த ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்

வாக்காளர் பட்டியலைச் சீரமைத்து புதுப்பிக்கும் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின் (SIR) இரண்டாம் கட்டத்தைத் திங்கட்கிழமை (அக்டோபர் 27) அதிகாரப்பூர்வமாக அறிவித்த இந்தியத் தேர்தல் ஆணையம் (EC), 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குத் தேவையான ஆவணங்களின் பட்டியலை வெளியிட்டது.

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இரண்டாம் கட்ட SIR பணிகள் நடைபெறும் என அறிவிப்பு

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைச் சீரமைத்து புதுப்பிக்கும் நோக்கத்துடன் கூடிய சிறப்புத் தீவிர திருத்தப் பணியின் (SIR) இரண்டாம் கட்டத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை (அக்டோபர் 27) அறிவித்துள்ளது.