வானிலை அறிக்கை: இந்த வாரம் முழுக்க தமிழகம் மற்றும் புதுவைக்கு மிதமழை உண்டு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் நவம்பர் 3 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மாநிலத்தின் பல இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, சென்னை எண்ணூர் பகுதியில் 13 செ.மீ., மற்ற இடங்களில் 8 முதல் 11 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது. அடுத்த சில நாட்களில் மாநிலத்தின் கரையோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள், குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம்
சென்னை வானிலை நிலவரம்
சென்னையில் தற்போது வானம் மேகமூட்டத்துடன் வானம் காணப்படுகிறது. எனினும் இன்று பிற்பகலில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அதிகபட்ச வெப்பம், 33°C ஆக இருக்குமெனவும் கணிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளை வெப்ப நிலை 34°C வரை உயரக்கூடும். வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி,"வடகிழக்கு பருவமழை செயற்பாட்டால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை சில இடங்களில் பெய்யும். நவம்பர் 3 வரை மழை வாய்ப்பு உள்ளது."