LOADING...
டெல்லி ஆசிட் வீச்சு வழக்கில் அதிர்ச்சி திருப்பம்: தந்தையே போட்ட ஸ்கெட்ச்
குற்றவாளியை பொய் வழக்கில் சிக்க வைக்க முயன்றதாக தந்தை ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்

டெல்லி ஆசிட் வீச்சு வழக்கில் அதிர்ச்சி திருப்பம்: தந்தையே போட்ட ஸ்கெட்ச்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 28, 2025
09:01 am

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் 20 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையே இந்த தாக்குதலை திட்டமிட்டதாகவும், முக்கியக் குற்றவாளியை பொய் வழக்கில் சிக்க வைக்க முயன்றதாகவும் காவல்துறையிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழக மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் குறித்து ஆரம்பத்தில் எழுந்த தகவல்களுக்கு முற்றிலும் மாறாக, பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அகீல், சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளை ஒப்புக்கொண்டுள்ளார். அகீல், தன்னை பாலியல் தொந்தரவு வழக்கில் சிக்க வைத்த ஜிதேந்தரை பழிவாங்க, அவரை ஆசிட் வீச்சு வழக்கில் மாட்டிவிட, தனது மளுடன் சேர்ந்து இந்தத் தாக்குதல் கதையை அரங்கேற்றியுள்ளார்.

விவரங்கள்

பழிவாங்க மகளுடன் சேர்ந்து நாடகமாடிய தந்தை

இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆசிட்டை கூட, பாதிக்கப்பட்ட மாணவியே (டாய்லெட் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிட்) கொண்டு வந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஜிதேந்தரின் மனைவி, அகீல் மீது பாலியல் பலாத்கார வழக்கு (Rape Case) பதிவு செய்துள்ளார். அகீல், ஜிதேந்தரின் மனைவியின் ஆபாசப் படங்களை அவருக்கு அனுப்பி வைத்தார் என்றும், அவருடன் உறவு வைத்திருந்தார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து தப்பிக்கவும், பழிவாங்கவும் அகீல் இந்த ஆசிட் வீச்சு நாடகத்தை ஆடியதாக ஒப்புக்கொண்டுள்ளார். தனது மகளை ஆசிட் வீச்சு வழக்கில் சிக்க வைத்ததாக ஒப்புக்கொண்ட அகீல், தற்போது ஜிதேந்தரின் மனைவி தொடர்ந்த பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்ப குற்றச்சாட்டு

ஆரம்ப குற்றச்சாட்டு மற்றும் விசாரணை

ஆரம்பத்தில், கல்லூரியில் படிக்கும் மாணவி, தன்னை பின்தொடர்ந்து வந்த ஜிதேந்தர், அவரது கூட்டாளிகளான ஈஷான் மற்றும் அர்மான் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து ஆசிட் வீசியதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதில் மாணவி தனது முகத்தை பாதுகாத்துக் கொண்டதால், கைகளில் மட்டும் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ஜிதேந்தர் மற்றும் அவரது கூட்டாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து தப்பிக்கவும், பழிவாங்கவும் மாணவியின் தந்தை அகீல் இந்த சதித்திட்டத்தை உருவாக்கி, ஜிதேந்தரை ஆசிட் வீச்சு வழக்கில் சிக்க வைக்க முயன்றதை அவர் ஒப்புக்கொண்ட பிறகு, வழக்கு முழுவதுமாகத் தலைகீழாக மாறியுள்ளது. இந்தச் சம்பவம் டெல்லி காவல்துறையினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.