LOADING...
Montha புயல்: சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும்
Montha புயல் காரணமாக நேற்று முதல் சென்னையில் தொடர்ந்து மித மழை பெய்து வருகிறது

Montha புயல்: சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 28, 2025
09:37 am

செய்தி முன்னோட்டம்

வங்காள விரிகுடாவில் மோந்தா புயல் தீவிரமடைந்து வருகிறது. இது இன்று மாலை ஆந்திர மற்றும் ஒடிஷா அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மாநில அரசுகளும் பேரிடர் மீட்பு குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று வீசும் இந்த புயல், ஏற்கனவே கடலோரப் பகுதியில் பலத்த மழையையும், பலத்த காற்றுகளையும் கட்டவிழ்த்து விட்டது. புயல் காரணமாக நேற்று முதல் சென்னையில் தொடர்ந்து மித மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் 'Tamilnadu weatherman' X -இல் மழை குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

மழை நிலவரம்

2 மணி நேரத்திற்கு சென்னையில் மழை

புயல் காரணாமாக வட சென்னையில் தொடர்ந்து மிதமான மழை முதல் லேசான கனமழையும், தென் சென்னையில் லேசான தூறலும் அடுத்த 2 மணி நேரத்திற்கு நீடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மழையின் அளவு படிப்படியாகக் குறைந்து, சிறிது நேரத்தில் முற்றிலுமாக நின்றுவிடும் என அவர் பதிவிட்டுள்ளார். தற்போது வரை வட சென்னையில், 60-70 மி.மீ மழையும், எண்ணூர் மற்றும் காத்திவாக்கம் ஆகிய கடலை ஒட்டிய பகுதிகளில் மிகக் கனமழையும் பதிவாகியுள்ளது. தென் சென்னையை பொறுத்த வரை 30-50 மி.மீ மிதமான மழை பதிவாகியுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு சென்னையில் ஓரிரு இடங்களில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் அவர் கணித்துள்ளார்