LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

11 Oct 2025
பருவமழை

அக்டோபர் 16-18க்குள் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை வரும் அக்டோபர் 16 அல்லது 17 ஆம் தேதியுடன் முடியும் நிலையில், அதைத் தொடர்ந்து அக்டோபர் 16 முதல் 18 ஆம் தேதிக்குள் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார்.

11 Oct 2025
இந்தியா

எந்த பங்கும் இல்லை; தாலிபான் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது குறித்து இந்தியா விளக்கம்

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி புது டெல்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாதது குறித்து எழுந்த சர்ச்சைக்கு, அதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இந்தியா சனிக்கிழமை (அக்டோபர் 11) விளக்கமளித்தது.

10 Oct 2025
எய்ம்ஸ்

எய்ம்ஸ் டெல்லியில் இந்தியாவின் அரசு மருத்துவமனையில் முதல் ரோபோட்டிக் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 45 வயது நோயாளிக்கு, எய்ம்ஸ் டெல்லியில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் வெற்றிகரமாக இந்தியாவின் முதல் ரோபோட்டிக் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை ஒரு அரசு மருத்துவமனையில் செய்து முடித்துள்ளனர்.

10 Oct 2025
பீகார்

40 வயதிற்கு மேல் வாழ்வதே அரிது; மர்ம நோயால் பீடிக்கப்பட்ட பீகார் கிராமத்தின் பின்னணி

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள தூத் பானியா கிராமத்தில் வசிக்கும் பழங்குடி சமூகத்தை ஒரு மர்ம நோய் கடுமையாகப் பாதித்துள்ளது.

SAKSHAM: ட்ரோன்களை உடனடியாக தவிடுபொடியாக்கும் இந்திய ராணுவத்தின் புதிய அமைப்பு

இந்திய இராணுவம் SAKSHAM எனப்படும் ஒரு உள்நாட்டு எதிர்-ஆளில்லா வான்வழி அமைப்பை (C-UAS) அறிமுகப்படுத்தியுள்ளது.

10 Oct 2025
மதுரை

திருப்பரங்குன்றம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; ஆடு, கோழி பலியிட நிரந்தர தடை விதித்து உத்தரவு

மதுரை திருப்பரங்குன்றம் மலைச் சர்ச்சை தொடர்பான வழக்கில், மூன்றாவது நீதிபதி விஜயகுமார் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

10 Oct 2025
கரூர்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கேட்கும் உச்ச நீதிமன்றம்

கரூரில் நடந்த தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் நடிகர் விஜய்யின் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் (சுப்ரீம் கோர்ட்) இன்று விசாரித்துள்ளது.

காபூலில் உள்ள தொழில்நுட்பத் தூதரகத்தை முழு தூதரகமாகத் தரம் உயர்த்தியது இந்தியா; எஸ்.ஜெய்சங்கர் அறிவிப்பு

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, காபூலில் உள்ள இந்தியாவின் தொழில்நுட்பத் தூதரகத்தை முழு அளவிலான இந்தியத் தூதரகமாக (Embassy) தரம் உயர்த்தியதாக வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) அறிவித்தார்.

10 Oct 2025
ஊராட்சி

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு

தமிழ்நாட்டில் அரசு வேலைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு, அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் (Grama Panchayat Secretary) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காசா அமைதி ஒப்பந்தத்திற்கு டிரம்ப் மற்றும் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடிய மோடி 

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இரு தலைவர்களுடனும் தொலைபேசியில் உரையாடி, இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் அமைதித் திட்டத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

10 Oct 2025
போலியோ

பெற்றோர்கள் கவனத்திற்கு! வரும் அக்டோபர் 12ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

வரும் அக்டோபர் 12, 2025 அன்று, தமிழ்நாட்டில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் மத்திய அரசின் சார்பில் 6 மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பணக்காரர்களில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார், இரண்டாமிடத்தில் அதானி 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, இந்தியாவின் பணக்காரர் என்ற தனது நிலையை தக்க வைத்துக்கொண்டார்.

09 Oct 2025
இந்தியா

காலிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரிட்டன் பிரதமரிடம் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் கீத் ஸ்டார்மர் வியாழக்கிழமை (அக்டோபர் 9) விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.

கர்நாடகாவில் பணிபுரியும் பெண்களுக்கு மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு கட்டாயம்

பணியிடத்தில் சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, கர்நாடக மாநில அமைச்சரவை, பணிபுரியும் பெண்களுக்கு மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கி ஒப்புதல் அளித்தது.

2022க்கு முந்தைய தம்பதிகளுக்கு வாடகைத் தாய் வயது வரம்புகள் பொருந்தாது: உச்ச நீதிமன்றம்

வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2021 இன் கீழ் உள்ள வயது வரம்புகள், ஜனவரி 2022 க்கு முன்பு வாடகைத் தாய் முறையை தொடங்கிய தம்பதிகளுக்கு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Trending: கிடைக்கிற கேப்-ல எல்லாம் பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் IAF இப்போ குடுத்தது செம ட்விஸ்ட்!

இந்திய விமானப்படை தினத்தன்று பரிமாறப்பட்ட மெனுவில் ராவல்பிண்டி சிக்கன் டிக்கா மசாலா, போலாரி பனீர் மேத்தி மலாய் மற்றும் பாலகோட் டிராமிசு ஆகியவை இடம்பெற்றன.

09 Oct 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(அக்டோபர் 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

09 Oct 2025
கல்வி

9 பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களை அமைக்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான கல்வி உறவுகளை வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் கீத் ஸ்டார்மர் ஆகியோர் இணைந்து 9 முன்னணி பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்க உள்ளதை அறிவித்துள்ளனர்.

ஆண்டுக்கு இரண்டு முறை உடற்தகுதித் தேர்வுகள்; இந்திய ராணுவ அதிகாரிகளுக்கான விதிகளில் திருத்தம்

இந்திய ராணுவம் அதன் படைகளின் போர் தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில், புதிய உடற்தகுதி விதிகளை அறிவித்துள்ளது.

09 Oct 2025
இந்தியா

இந்தியா- UK இடையே பாதுகாப்பு, கல்வி, முக்கியமான கனிமங்கள் ஆகியவற்றில் முக்கிய ஒப்பந்தங்கள் அறிவிப்பு 

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடியும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் தொடர்ச்சியான ஒப்பந்தங்களை அறிவித்துள்ளனர்.

09 Oct 2025
தமிழ்நாடு

'சைக்கோ' கொலையாளி தஷ்வந்த் விடுதலை குறித்த குழப்பமும், மக்கள் கொந்தளிப்பும்!- உங்கள் கருத்து என்ன?

தமிழ்நாட்டின் மனசாட்சியை உலுக்கிய ஒரு 'சைக்கோ' குற்றவாளியான தஷ்வந்த் நேற்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

09 Oct 2025
இந்தியா

நச்சுத்தன்மை வாய்ந்த மூன்று இருமல் மருந்துகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்திடம் இந்தியா தகவல்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று இருமல் மருந்துகள், அதிக நச்சுத்தன்மை கொண்ட டைஎதிலீன் கிளைகால் (Diethylene Glycol - DEG) எனப்படும் இரசாயனத்தால் நச்சுத்தன்மை கொண்டுள்ளதாக இந்திய மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) உலக சுகாதார நிறுவனத்திடம் (WHO) தெரிவித்துள்ளது.

தலைமை நீதிபதி மீது செருப்பை வீசிய வழக்கறிஞர் பார் அசோசியேஷனில் இருந்து நீக்கம்

இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய் மீது ஷூ வீசியதற்காக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் (SCBA) வெளியேற்றியுள்ளது.

09 Oct 2025
காசா

காசா மக்களுக்கு நிம்மதி அளிக்கும்; இஸ்ரேல்-ஹமாஸ் அமைதி ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கவும், இஸ்ரேலியப் படைகள் முற்றுகையிடப்பட்ட போர்ப் பகுதியிலிருந்து படிப்படியாக விலகிக் கொள்ளவும் வழிவகுக்கும், அமெரிக்கா முன்னெடுத்த அமைதி ஒப்பந்தத்தை இந்தியா அதிகாரப்பூர்வமாக வரவேற்றுள்ளது.

09 Oct 2025
கோவை

கோவைக்கு ஜாக்பாட்! தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் இன்று திறப்பு

கோவை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, அவினாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் இன்று (அக்டோபர் 9, 2025) மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

09 Oct 2025
சென்னை

Coldrif இருமல் மருந்து விவகாரம்: ஸ்ரேசன் பார்மா உரிமையாளர் சென்னையில் கைது செய்யப்பட்டார்

மத்தியப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 20 குழந்தைகள் மரணத்துக்கு காரணமான Coldrif இருமல் மருந்து விவகாரத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் எஸ். ரங்கநாதன் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் ஊடுருவல் எனத்தகவல்; பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் இரண்டு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

போரூர் சிறுமி கொடூர கொலை வழக்கில் அதிரடி திருப்பம்: தஷ்வந்த்தை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்

சென்னை அருகே போரூரில் கடந்த 2017-ஆம் ஆண்டு 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் எரித்து கொல்லப்பட்ட கொடூர வழக்கில், முக்கிய குற்றவாளியான தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

டெல்லி-கொல்கத்தா நெடுஞ்சாலையில் 20 கி.மீ நீள போக்குவரத்து நெரிசல்; 4 நாட்களாக தேங்கி நிற்கும் வாகனங்கள்

தேசிய நெடுஞ்சாலை 19 இல் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து நெரிசலால் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் மூன்று முதல் நான்கு நாட்களாக சிக்கித் தவிக்கின்றனர்.

இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் 125 பேர் கொண்ட வணிகக் குழுவுடன் மும்பை வந்தடைந்தார்

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இரண்டு நாள் பயணமாக புதன்கிழமை மும்பை வந்தார்.

08 Oct 2025
விஜய்

கரூர் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க அனுமதி கோரிய விஜய்

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சோக நிகழ்வுக்குப் பிறகு, தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்திக்க தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரிடம் (DGP) அனுமதி கோரியுள்ளார்.

08 Oct 2025
ரயில்கள்

ரயில் பயணிகளின் கவனத்திற்கு! இனி, கூடுதல் கட்டணம் இல்லாமல் டிக்கெட் தேதியை ஆன்லைனில் மாற்றலாம்

ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, பயணத் திட்டங்களில் மாற்றம் செய்யும் புதிய வசதியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து; இடிபாடுகளுக்குள் புதைந்து 15 பேர் உயிரிழப்பு

ஹிமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட பெரும் நிலச்சரிவை தொடர்ந்து பேருந்து இடிபாடுகளுக்கு அடியில் புதைந்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

Coldrif இருமல் மருந்து மரணங்கள்: சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப் உட்கொண்டதாக கூறப்படும் 14 குழந்தைகள் இறந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை நடத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு (பிஐஎல்) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

07 Oct 2025
விஜய்

"நான் உங்களுடன் இருக்கிறேன், இருப்பேன்": கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ காலில் பேசும் TVK விஜய்

நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், கரூரில் நடந்த பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலமாக பேசினார்.

பல பிஞ்சு உயிர்களை காவு வாங்கிய Coldrif இருமல் சிரப் தயாரித்த தொழிற்சாலையில் 350-க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் அம்பலம்

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 16 குழந்தைகளின் மரணத்துடன் தொடர்புடைய 'கோல்ட்ரிஃப்' (Coldriff) இருமல் சிரப்பை தயாரித்த ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தில், தமிழக அரசு நடத்திய ஆய்வில் 350-க்கும் மேற்பட்ட கடுமையான விதிமீறல்கள் மற்றும் சுகாதாரமற்ற நடைமுறைகள் அம்பலமாகியுள்ளன.

07 Oct 2025
கனமழை

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்: எந்தெந்த மாவட்டங்களுக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு (அக்டோபர் 12 வரை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

07 Oct 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(அக்டோபர் 8) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கரூர் விபத்தால் பின்னடைவு: தவெக உள்கட்டமைப்பை மாற்றியமைக்க விஜய் தீவிரம்?

கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு (தவெக)மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.