LOADING...
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை
காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 09, 2025
08:34 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று மட்டும் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது. தென் மாநிலங்கள் மற்றும் குமரிக்கடல் பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை வாய்ப்பு

மழை வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்

IMD அறிவிப்பின் படி, இன்று, கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும், நாளை, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். அதே வேளையில், அக்டோபர் 11 அன்று, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்குள் நகரத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.