LOADING...
அக்டோபர் 16-18க்குள் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அக்டோபர் 16-18க்குள் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

அக்டோபர் 16-18க்குள் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 11, 2025
03:41 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை வரும் அக்டோபர் 16 அல்லது 17 ஆம் தேதியுடன் முடியும் நிலையில், அதைத் தொடர்ந்து அக்டோபர் 16 முதல் 18 ஆம் தேதிக்குள் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழையானது வழக்கம்போல் அக்டோபர் முதல் டிசம்பர் வரை 92 நாட்களுக்குப் பெய்யும். இந்த அக்டோபர் மாதத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 170 மிமீ ஆக இருக்க வேண்டும். ஆனால் இதுவரை சுமார் 50 மிமீ மட்டுமே மழை பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்த ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழை இயல்பை விட அதிகமாகப் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மழை

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தற்போது நிலவும் வானிலை அமைப்பின்படி, கிருஷ்ணகிரி உட்பட 15 மாவட்டங்களில் சனிக்கிழமை (அக்டோபர் 11) மழை பெய்யக்கூடும். மேலும், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை இயல்பை விட 29% கூடுதலாக, அதாவது 450 மிமீக்குப் பதிலாக 580 மிமீ பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில்தான் அதிக காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் மற்றும் புயல்கள் உருவாக வாய்ப்புள்ளது. புயல் சின்னம் உருவாகும்போது சென்னையில் 200 மிமீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.