LOADING...
திருப்பரங்குன்றம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; ஆடு, கோழி பலியிட நிரந்தர தடை விதித்து உத்தரவு
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட நிரந்தர தடை விதித்து உத்தரவு

திருப்பரங்குன்றம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; ஆடு, கோழி பலியிட நிரந்தர தடை விதித்து உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 10, 2025
05:32 pm

செய்தி முன்னோட்டம்

மதுரை திருப்பரங்குன்றம் மலைச் சர்ச்சை தொடர்பான வழக்கில், மூன்றாவது நீதிபதி விஜயகுமார் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். மலையின் உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதற்கு நிரந்தரமாகத் தடை விதித்தும், இந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக, தர்காவில் பலியிடத் தடை கோரி இந்து அமைப்பினரும், அதற்கு அனுமதி கோரி தர்கா நிர்வாகம் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தன. இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கியதால், மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது.

உறுதி

தடை உறுதி

வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், ஆடு, கோழி பலியிடத் தடை விதிப்பதாக உறுதி செய்தார். எனினும், சிக்கந்தர் தர்கா செல்லும் வழியில் உள்ள நெல்லித் தோப்பில் இஸ்லாமியர்கள் வழக்கம்போல் வழிபாடு நடத்த விதிக்க தடை விதிக்க மறுத்து, அவர்கள் வழிபாடுகளைத் தொடரலாம் என்று அனுமதி அளித்தார். இந்தத் தீர்ப்பானது, திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தன்மை மற்றும் பெயர் குறித்து எழுப்பப்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது. முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிரெதிர் துருவங்களாக சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பேசி வந்ததால் பதற்றம் நிலவியது குறிப்பிடத்தக்கது.