
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் அரசு வேலைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு, அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் (Grama Panchayat Secretary) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாவட்டம் வாரியான காலிப் பணியிட விவரங்களை விண்ணப்பதாரர்கள் https://tnrd.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும், அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகுதியுடைய நபர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் நவம்பர் 9, 2025 ஆகும்.
தகுதிகள்
முக்கியத் தகுதிகள் மற்றும் சம்பள விவரம்
கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 8 ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாகப் படித்திருக்க வேண்டும். வயது வரம்பு 01-07-2025 நிலவரப்படி பொதுப் பிரிவினர் 18 முதல் 31 வயது வரையிலும், எஸ்சி/எஸ்டி பிரிவினர் 18 முதல் 37 வயது வரையிலும் இருக்க வேண்டும். சம்பள விகிதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை இருக்கும். இந்த வேலைக்கான நேர்காணல்கள் டிசம்பர் முதல் வாரத்தில் (டிசம்பர் 4 முதல் 12) நடைபெறும். நேர்காணல் முடிவுகள் டிசம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் வெளியிடப்பட்டு, டிசம்பர் 17, 2025 அன்று தகுதியானவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.