இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
சுங்கத்துறை vs வின்ட்ராக் சர்ச்சை: உண்மை கண்டறியும் விசாரணைக்கு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு!
சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் மீது தமிழ்நாட்டை சேர்ந்த தளவாட (Logistics) நிறுவனமான வின்ட்ராக் இன்க் (Wintrack Inc) சுமத்தியுள்ள தீவிரமான ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, இவ்விவகாரம் குறித்து உண்மை அடிப்படையிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய ஆறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று, அக்டோபர் 3 கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு பின், அக்டோபர் 26 முதல் இந்தியாவும், சீனாவும் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளன
இருதரப்பு உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு முக்கிய படியாக, இந்தியாவும், சீனாவும் நேரடி விமானங்களை மீண்டும் தொடங்க ஒப்புக் கொண்டுள்ளன.
சர் க்ரீக் எல்லையில் பாகிஸ்தானின் ராணுவ இயக்கங்கள் அதிகரிப்பு: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
குஜராத்தின் சர் க்ரீக் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் சமீபத்தில் மேற்கொண்ட ராணுவ உள்கட்டமைப்பு பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு, இந்தியா கடுமையான பதிலடி அளிக்க தயார் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
RSS நிகழ்வில் முதல்முறையாக பாரத மாதா உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி
ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், இந்திய நாணயத்தில் முதன்முதலில் பாரத மாதாவின் உருவம் இடம்பெற்றுள்ள சிறப்பு தபால் தலை மற்றும் நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வெளியிட்டார்.
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தியாவின் 5வது தலைமுறை ஜெட் திட்டம் தொடங்குகிறது; HAL, டாடா ஏலத்தை சமர்ப்பித்தன
இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு நிறுவனங்கள் ஏழு, மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (AMCA) திட்டத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உடன் இணைந்து பணியாற்ற ஏலங்களை சமர்ப்பித்துள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) வழங்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
Karur Stampede எதிரொலி: அடுத்த இரண்டு வாரங்களுக்கான TVK விஜய் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தவெக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, காய்ச்சல் மற்றும் கால் வலி காரணமாக பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
"விஜய் 4 மணிக்கு வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது": கரூர் விபத்து குறித்து செந்தில் பாலாஜி
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயரமான கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு, நடிகர் விஜய்யின் வருகை நேரம் மற்றும் அவரது கட்சி சார்பில் செய்யப்பட்ட அடிப்படை வசதி குறைபாடுகளே காரணம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
எண்ணூர் அனல் மின் நிலையத்தில் எஃகு வளைவு இடிந்து விழுந்தது: 9 தொழிலாளர்கள் உயிரிழப்பு
தமிழ்நாட்டின் எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள அனல் மின் நிலைய கட்டுமானத் தளத்தில் இன்று ஒரு பயங்கர விபத்து நடந்தது.
Fact Check: அக்டோபர் 3ஆம் தேதி அரசு பொது விடுமுறை அல்ல!
முன்னதாக இன்று காலை ஆயுத பூஜை தொடர் விடுமுறை முன்னிட்டு அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்தாக செய்தி வெளியாகி இருந்தது.
"உண்மை விரைவில் வெளி வரும்: கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் வெளியிட்ட முதல் வீடியோ
கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததைத்தொடர்ந்து, தமிழக வெற்றி கழகம்(தவெக) தலைவர் விஜய் தனது முதல் காணொளி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை: அக்டோபர் 3 வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிப்பு!
ஆயுத பூஜை தொடர் விடுமுறை முன்னிட்டு அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்; பாலிவுட் துணை நடிகர் கைது
சென்னை விமான நிலையத்தில், ரூ.35 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ போதைப்பொருளை கடத்த முயன்றதாக கூறப்படும் வழக்கில் ஒரு பாலிவுட் துணை நடிகர், சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
TVK கரூர் பொதுக்கூட்டம்: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் மனு
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் பிரச்சாரப் பயணத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக, தவெக-வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
புதுச்சேரியில் அனைத்து உயர்கல்விக்கும் 100% கட்டண விலக்கு: கவர்னர் ஒப்புதல்
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, அனைத்து உயர்கல்விக்கும் 100 சதவீதம் கல்விக் கட்டண விலக்கு அளிக்கும் திட்டத்திற்கு ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார்.
26/11 தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க அழுத்தம் தந்தது: ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு பாகிஸ்தானுக்கு எதிராகப் பழிவாங்கும் இராணுவ நடவடிக்கையைத் தவிர்க்க முடிவு செய்தது ஏன் என்பதை தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: IMD அறிவிப்பு
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (செப்டம்பர் 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தவெக பொதுச்செயலாளர் இன்று நள்ளிரவுக்குள் கைது செய்யப்படலாம் என தகவல்
கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச் செயலாளர் என்.ஆனந்தை திங்கட்கிழமை (செப்டம்பர் 29) நள்ளிரவுக்குள் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உ.பி.யில் பயங்கரம்; ₹39 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்றோர், மனைவியை கொன்ற மகன் கைது
உத்தரப் பிரதேசத்தில் இன்சூரன்ஸ் தொகையாகக் கோடிக்கணக்கான ரூபாயைப் பெறுவதற்காகத் தனது பெற்றோர் மற்றும் மனைவியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த நொய்டா இளைஞரின் கடத்தல் நாடகம்; சிக்கியது எப்படி?
நொய்டாவைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.4.7 லட்சத்தை இழந்த பிறகு, தனது குடும்பத்தினரிடம் இருந்து ரூ.20 லட்சத்தைப் பறிப்பதற்காகத் தன்னைத் தானே கடத்திக்கொண்டதாக நாடகம் ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல்; NDA பிரதிநிதிகள் குழு அமைப்பு
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை (செப்டம்பர் 29) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
லடாக் போராட்டங்களில் முன்னாள் ராணுவ வீரர் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசை கடுமையாக சாடும் காங்கிரஸ்
லடாக்கில் சமீபத்தில் நடந்த போராட்டங்களை கையாண்டதற்காக காங்கிரஸ் கட்சி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளது. இந்த போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
TVK பேரணி கரூர் கூட்ட நெரிசல்: நீதிமன்றத்தில் TVK சார்பாக எழுப்பப்பட்ட கேள்விகள் என்ன?
கடந்த சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக (தமிழக வெற்றி கழகம்) பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ள நிலையில், அக்கட்சியின் சார்பில் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளனர்.
கரூர் சம்பவம்: மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கை எடுப்பதில் தாமதம்; சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக தவெக திட்டம்
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை: மகாராஷ்டிரா மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு
மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
'களத்தில் ஆபரேஷன் சிந்தூர்': இந்தியாவின் ஆசிய கோப்பை வெற்றியை பாராட்டிய மோடி
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை 2025 வெற்றிக்காக இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
TVK Stampede கரூர் துயர சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
கடந்த சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், மரண மொத்த எண்ணிக்கையை 41 ஆக உயர்த்தியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (செப்டம்பர் 29) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி; நாளை தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு செய்யப்படுவாதாக அறிவிப்பு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சோக நிகழ்வுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, திங்கட்கிழமை (செப்டம்பர் 29) தமிழ்நாடு முழுவதும் முழு கடை அடைப்பு கடைபிடிக்கப்படும் என தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 5 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 5, 2025 வரை பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சோகம்: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தையடுத்து, காங்கிரஸ் கட்சித் தலைமை உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குப் பெரும் நிதியுதவியை அறிவித்துள்ளது.
பாயின்ட் நீமோவைக் கடந்து இந்திய கடற்படை பெண் அதிகாரிகள் சாதனை: மனதின் குரலில் பிரதமர் மோடி பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) ஒலிபரப்பான தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரலில் (Mann Ki Baat), இந்தியக் கடற்படையின் இரண்டு அதிகாரிகளின் துணிச்சலான சாதனையை வெகுவாகப் பாராட்டினார்.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 31 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தை ஒட்டி, கட்சியின் தலைவர் விஜய் பாதிக்கப்பட்டோருக்கான நிதியுதவியை அறிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல்: தவெக நிர்வாகிகள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம் தொடர்பாக, காவல்துறை தற்போது தவெக கட்சித் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
கரூர் சோகத்தைத் தொடர்ந்து சென்னையில் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சோகச் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது இதுதான்
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 39 பேர் உயிரிழந்த மற்றும் பலர் காயமடைந்த சோகச் சம்பவம் குறித்துத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) செய்தியாளர் சந்திப்பில் மிகுந்த கவலை தெரிவித்தார்.