LOADING...
Fact Check: அக்டோபர் 3ஆம் தேதி அரசு பொது விடுமுறை அல்ல! 
அக்டோபர் 3 ஆம் தேதி அரசு அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும்

Fact Check: அக்டோபர் 3ஆம் தேதி அரசு பொது விடுமுறை அல்ல! 

எழுதியவர் Venkatalakshmi V
Sep 30, 2025
10:43 pm

செய்தி முன்னோட்டம்

முன்னதாக இன்று காலை ஆயுத பூஜை தொடர் விடுமுறை முன்னிட்டு அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்தாக செய்தி வெளியாகி இருந்தது. எனினும் TN Fact Check படி, அந்த செய்தி போலியானது. அன்று அரசு அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும். அக்டோபர் 1ம் தேதி நாளை ஆயுத பூஜை விடுமுறையாகவும், அக்டோபர் 2ம் தேதி விஜய தசமி, அரசு விடுமுறையாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4,5ம் தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து விடுமுறை நாட்களாக உள்ளன. இடையில் வரும் அக்டோபர் 3ம் தேதி மட்டும் வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்தது. அன்றும் விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post