LOADING...
சுங்கத்துறை vs வின்ட்ராக் சர்ச்சை: உண்மை கண்டறியும் விசாரணைக்கு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு!
சென்னை சுங்க அதிகாரிகளின் துன்புறுத்தலால் இறக்குமதி-ஏற்றுமதி நடவடிக்கைகளை நிறுத்துவதாக Wintrack அறிவித்தது

சுங்கத்துறை vs வின்ட்ராக் சர்ச்சை: உண்மை கண்டறியும் விசாரணைக்கு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு!

எழுதியவர் Venkatalakshmi V
Oct 03, 2025
08:40 am

செய்தி முன்னோட்டம்

சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் மீது தமிழ்நாட்டை சேர்ந்த தளவாட (Logistics) நிறுவனமான வின்ட்ராக் இன்க் (Wintrack Inc) சுமத்தியுள்ள தீவிரமான ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, இவ்விவகாரம் குறித்து உண்மை அடிப்படையிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுங்கத்துறையின் "இடைவிடாத துன்புறுத்தல்" காரணமாக தங்கள் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக வின்ட்ராக் இன்க் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "சென்னையில் உள்ள M/s வின்ட்ராக் இன்க் எழுப்பிய விஷயத்தை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில், நியாயமான, வெளிப்படையான மற்றும் உண்மை அடிப்படையிலான விசாரணைக்கு" உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

உத்தரவு

நிதி அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு

வருவாய் துறை (DoR) சார்பில் ஒரு மூத்த அதிகாரி விரிவான உண்மை விசாரணையை நடத்த நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் விசாரிப்பது, அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்துவது மற்றும் தொடர்புடைய ஆவண ஆதாரங்களை மதிப்பாய்வு செய்வது ஆகியவை அடங்கும். இந்த விவகாரம் "மிகவும் தீவிரத்துடன்" கையாளப்படுவதாகவும், "சட்டத்தின்படி பொருத்தமான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க" அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

குற்றச்சாட்டுகள்

நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள்

வின்ட்ராக் இன்க் நிறுவனத்தின் நிறுவனர் பிரவீன் கணேசன், சென்னை சுங்க அதிகாரிகளின் துன்புறுத்தலால் அக்டோபர் 1 முதல் இந்திய இறக்குமதி-ஏற்றுமதி நடவடிக்கைகளை நிறுத்துவதாக X-இல் அறிவித்தார். இந்த ஆண்டு இருமுறை லஞ்சம் கேட்டதை அம்பலப்படுத்தியதால், தனது நிறுவனம் பழிவாங்கலை எதிர்கொண்டதாகவும், அதன் வணிகம் "முடங்கி அழிக்கப்பட்டதாகவும்" அவர் குற்றம் சாட்டினார். 6,993 அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு கப்பலுக்கு, தனது நிறுவனம் ரூ.2.1 லட்சத்திற்கு மேல் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், பேச்சுவார்த்தையின்போது அதிகாரிகள் 10 சதவீத "தள்ளுபடி" கூட வழங்கியதாகவும் கணேசன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அவர் தனது பதிவில், "இந்தியாவில், வணிகத்தில் எளிமை இல்லை, நிர்வாகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் ஊழல் மட்டுமே உள்ளது" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post