
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (செப்டம்பர் 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- மதுரை: மேலூர், தும்பைபட்டி, உசிலம்பட்டி சுற்றுவட்டாரங்கள், திருவாதவூர், கொத்தக்குடி ஆகிய சுற்றுவட்டாரங்கள். பெரம்பலூர்: பெரியதுக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான். மேலே குறிப்பிட்டுள்ள மதுரை மற்றும் பெரம்பலூர் ஆகிய இரண்டு பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
விழுப்புரம்: வ.உ.சி நகர், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அயூரகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், வி.சாலை, கயத்தூர், பணப்பாக்கம், அடைக்கலாபுரம், ரெட்டிக்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, கீழக்கொந்தை, சின்னாச்சூர், கவனிப்பாக்கம், சித்தாத்தூர், கொளத்தூர், வி.அரியனூர், கண்டமாநதி, அத்தியூர் திருவதி, கேளியம்பாக்கம், மேலமேடு, பில்லூர், பிள்ளையார்குப்பம், புருச்சானூர், ராவணன், கல்லிப்பட்டு, அகரம், திருப்பச்சனூர், கொங்கரகொண்டான், சேர்ந்தனூர். இந்த அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.