LOADING...
தென் மாவட்டங்களில் கனமழை தொடர்கிறது; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
இன்று முதல் வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது

தென் மாவட்டங்களில் கனமழை தொடர்கிறது; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 16, 2025
08:29 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று முதல் வடகிழக்குப் பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருவதால், சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் தாக்கம் காரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், கனமழை பெய்து வரும் 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 16, 2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் ஒருநாள் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

விவரங்கள்

KTCC மழை விவரங்கள்

இதற்கிடையில், தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது X பதிவில், "தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு முதல் பெரிய மழை. தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளுக்கு அருகில் மழை இன்னும் 3 மணி நேரம் நீடிக்கும் மற்றும் படிப்படியாகக் குறையும்" என்று பதிவிட்டுள்ளார். "தூத்துக்குடி மற்றும் நெல்லையின் பிற உள் பகுதிகள் நண்பகல்/மாலை வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரியும் சேரும்". சென்னையை பொறுத்த வரை பகலில் அங்கங்கே மழை பெய்யும் எனவும், இன்று இரவு தொடங்கும் போது, ​​மழை அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.