LOADING...
தமிழகத்தில் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது
2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது

தமிழகத்தில் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது

எழுதியவர் Venkatalakshmi V
Oct 14, 2025
03:44 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் (அக்டோபர் 16 அல்லது 17) வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது. இதனிடையே தென்மேற்குப் பருவமழை நாட்டின் எஞ்சிய பகுதிகளில் இருந்து அடுத்த இரண்டு நாட்களில் முழுமையாக விலகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று (அக்டோபர் 14) 16 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 KTCC

தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி முதல் சென்னை வரை இன்று முதல் திடீர் மற்றும் தீவிரமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தனது Tamilnadu weatherman பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அடுத்த சில நாட்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மேலும், கடலில் இருந்து நிலப்பகுதிக்குள் மேகங்கள் நகர்வதால், இன்று குறுகிய நேரத்தில் திடீர் கனமழை (Intense bursts) பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார். வரும் அக்டோபர் 15 முதல் 18ஆம் தேதி வரை தூத்துக்குடி முதல் சென்னை வரையிலான கடலோரப் பகுதிகளில் மழையின் அளவு அதிகரித்து, அதன் தீவிரம் கூடுதலாக இருக்கும் என அவரது டீவீட்டில் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post