இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

மின்வாரியத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்; மின் கட்டணம் செலுத்த புதிய முகவரி 

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனைத்து சேவைகளும் தற்போது ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா அருகே பிக்-அப் வாகனம் கவிழ்ந்ததால் 18 பேர் பலி

சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டத்தில் பிக் அப் வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 14 பெண்கள் உட்பட 18 பேர் இறந்தனர். மேலும், நான்கு பேர் காயமடைந்தனர் என்று இன்று காவல்துறை தெரிவித்துள்ளது.

20 May 2024

டெல்லி

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை நீட்டிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு 

தற்போது ரத்து செய்யப்பட்ட டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை நீட்டிக்கக் கோரி அமலாக்க இயக்குனரகம் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தது.

20 May 2024

குஜராத்

இலங்கையைச் சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது 

அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) கைது செய்துள்ளது.

ராஜஸ்தானில் மைனர் சிறுமியை பலாத்காரம் செய்து அவளை உயிருடன் எரித்த 2 சகோதரர்களுக்கு மரண தண்டனை 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவளை நிலக்கரி உலையில் உயிருடன் எரித்து கொலை செய்த இருவருக்கு ராஜஸ்தானின் பில்வாராவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

20 May 2024

கேரளா

சர்வதேச அளவில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட கேரள நபர் கைது 

கேரளாவில் உள்ள எர்ணாகுளம் ஊரக காவல்துறையினர், உடல் உறுப்பு விற்பனைக்காக சர்வதேச அளவில் ஆள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் சபித் நாசர் என்ற நபரை கைது செய்துள்ளனர்.

20 May 2024

இந்தியா

"இந்தியா ஈரானுக்கு துணையாக நிற்கிறது": அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஈரானின் இந்த துயர நேரத்தில் இந்தியா துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.

20 May 2024

டெல்லி

இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை தவிர்க்க வேண்டிய சாலைகளை அறிவித்தது டெல்லி போக்குவரத்து காவல்துறை 

இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சில சாலைகளில் வாகனங்கள் இயக்கம் பாதிக்கப்படும் என்று டெல்லி போக்குவரத்து காவல்துறை இன்று பயணிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

20 May 2024

கனமழை

தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை; தயார் நிலையில் மீட்பு குழுவினர், மருத்துவ பணியாளர்கள்

கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து வருகிறது.

20 May 2024

தேர்தல்

அமேதி, ரேபரேலி உள்ளிட்ட 49 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

வீடியோ: பெங்களூரில் ஒரு பெண்ணை மடியில் வைத்துக்கொண்டு பைக் ஓட்டிய வாலிபரை வலைவீசி பிடித்த காவல்துறை 

பெங்களூரில் உள்ள மேம்பாலத்தில் ஒரு பெண்ணை மடியில் வைத்துக்கொண்டு பைக்கில் வாலிபர் ஒருவர் ஆபத்தான முறையில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

19 May 2024

தமிழகம்

21 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழகம்: தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே,

19 May 2024

டெல்லி

ஆம் ஆத்மி கட்சியை நசுக்கப் பார்க்கிறார் பிரதமர் மோடி: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்க பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஆபரேஷன் ஜாது என்பதை தொடங்கியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று குற்றம் சாட்டியுள்ளார்.

19 May 2024

டெல்லி

'நான் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பேன்': இண்டியா கூட்டணியின் ஒற்றுமை குறித்து பேசினார் ராகுல் காந்தி

இரு கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையேயான வலுவான பிணைப்பின் அடையாளமாக நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி(ஏஏபி) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க இருப்பதாகவும், தான் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க இருப்பதாகவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று தெரிவித்தார்.

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நேரடி சூரிய வெளிச்சத்தில் வைக்கப்பட்ட பிறந்த குழந்தை பலி

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரியில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை 30 நிமிடங்களுக்கு நேரடி சூரிய ஒளியில் வைக்கப்பட்டதால் உயிரிழந்தது.

18 May 2024

டெல்லி

'நாளை பாஜக அலுவலகத்திற்கு வருகிறேன்': தனது உதவியாளர் கைதுக்கு பின் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம் 

தனது உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் "ஜெயில் பரோ" போராட்டத்தை அறிவித்துள்ளார்.

18 May 2024

தமிழகம்

20 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழகம்: தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே,

18 May 2024

டெல்லி

சுவாதி மாலிவால் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இருந்து பிபவ் குமார் கைது 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்குள் ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிபவ் குமாரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

18 May 2024

டெல்லி

எம்பி ஸ்வாதி மாலிவாலின் சிசிடிவி வீடியோவை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில், ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) புதிய சிசிடிவி வீடியோவை வெளியிட்டுள்ளது.

18 May 2024

ஹரியானா

ஹரியானா மாநிலம் நூஹில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்து: 9 பேர் பலி, 13 பேர் காயம்

ஹரியானாவின் குண்டலி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) விரைவுச் சாலையில் நேற்று இரவு பயணித்த பேருந்து தீப்பிடித்ததில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு டஜன் பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கிர்கிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மாணவர்களுக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் எச்சரிக்கை 

கிர்கிஸ்தானின் தலைநகரில் சர்வதேச மாணவர்களை குறிவைத்து கூட்டு வன்முறை வெடித்துள்ளதால், பிஷ்கெக்கில் உள்ள மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று அறிவுறுத்தின.

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாட்களுக்கு தடை

தென்காசி பழைய குற்றாலம் அருவியில் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டான்.

11 இறப்புகளை தொடர்ந்து சார் தாம் யாத்ரீகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

இந்த ஆண்டு சார் தாம் யாத்திரையில் பங்கேற்கும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நெல்லை சிறுவன்

தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது.

பாட்னா: பள்ளி வளாகத்தில் 3 வயது குழந்தையின் சடலம் கண்டெடுப்பு; பள்ளிவளாகம் தீவைப்பு 

பாட்னாவில் காணாவில்லை என தேடப்பட்ட 3 வயது சிறுவன், அவனது பள்ளியின் வாய்க்காலில்(ditch) சடலமாக கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் மீது வழக்கு பதிவு

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் மீது டெல்லி போலீசார் வியாழக்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

17 May 2024

மழை

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

16 May 2024

கனமழை

வட இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, தென்னிந்தியாவில் கனமழை எச்சரிக்கை

டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் குறிப்பாக வட இந்தியாவிற்கு வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

16 May 2024

மும்பை

16 உயிர்களை காவு வாங்கிய பங்கிற்கு அனுமதி இல்லை, விளம்பர பலகைக்கு மோசமான அஸ்திவாரம் என கண்டுபிடிப்பு

கடந்த திங்கள்கிழமை மும்பையின் காட்கோபரில் உள்ள பெட்ரோல் பம்ப்பின் விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, வரும் ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

16 May 2024

சென்னை

தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்; சென்னையில் மருத்துவக்கல்லூரி மாணவன் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகிறது.

2025ல் மோடி பதவி விலகுவார், ஷா பதவியேற்பார்: அரவிந்த் கெஜ்ரிவால் கணிப்பு

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனக்கு வாரிசாக மாற்றுவார் என அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

'மதுரைக்கு பெருமை சேர்த்த மதுரை வீரன்': விஜயகாந்த் பற்றி ரஜினி புகழாரம்

சென்ற வாரம், மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

சென்னையிலிருந்து நெல்லை வந்த அரசு பேருந்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்கள்

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு விரைவு பேருந்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: 8 மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற உத்தரவு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், குறிப்பிட்ட எட்டு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகளவு இருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

15 May 2024

இந்தியா

குடியுரிமை சட்டத்திற்கு கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டது

குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது.

இந்த 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. குறிப்பாக தென்காசிக்கு பறந்த தேசிய பேரிடர் எச்சரிக்கை 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் காதலிக்க மறுத்த பக்கத்து வீட்டு பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றவர் தப்பி ஓட்டம் 

கர்நாடகாவின் ஹுப்பாலியில் வசித்து வந்த 20 வயது பெண் ஒருவர் அண்டை வீட்டு காரரின் காதலை மறுத்ததால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் புகார்

பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது வரிசையாக புகார்களும், கைது சம்பவங்களும் நடந்தேறி வரும் நேரத்தில், பெண் காவலர் கொடுத்த புகாரின் விசாரணைக்காக மஹிளா நீதிமன்றத்திற்கு பெண் காவலர்கள் புடைசூழ சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.

உத்தரகாண்டில் பயங்கர காட்டுத் தீ: வன ஊழியர்கள் தேர்தல் பணிக்கு அனுப்பப்பட்டதால் உச்ச நீதிமன்றம் காட்டம் 

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று மாநில அரசை கடுமையாக சாடியுள்ளது.