அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஈரோடு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
#வானிலைசெய்திகள் | அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!#SunNews | #TNRain | #WeatherUpdate pic.twitter.com/jU9D7cotIM— Sun News (@sunnewstamil) May 17, 2024
சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு
#வானிலைசெய்திகள் | சென்னை மக்களுக்கு மழை அலர்ட் கொடுத்த பிரதீப் ஜான்!#SunNews | #ChennaiRains | #WeatherUpdate | @praddy06 pic.twitter.com/9HojQxbiNK— Sun News (@sunnewstamil) May 17, 2024