அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: 8 மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற உத்தரவு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், குறிப்பிட்ட எட்டு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகளவு இருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
அதனால் அம்மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மாநில சுகாதாரத்துறை மாவட்ட நிர்வாகங்களை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அனுப்பியுள்ள சுற்றரிக்கைப்படி, அண்மைக் காலமாக கொசுக்களால் பரவும் மிக வேகமாக பரவும் நோய்களில் ஒன்றான டெங்கு அதிகமாக பரவி வருகிறது.
திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தஞ்சாவூர் போன்ற சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மருத்துவமனைகளுக்கு பறந்த உத்தரவு
அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தினசரி காய்ச்சல் அறிக்கைகள் சேகரிக்கப்பட வேண்டும், ஒவ்வொரு நாளும் பின்வரும் அறிகுறிகளுடன் உள்நோயாளிகளின் வரிசை பட்டியல் தயாரித்து அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான காய்ச்சல், சொறி கொண்ட கடுமையான காய்ச்சல், கடுமையான வயிற்றுப்போக்கு, இன்ஃப்ளூயன்ஸா, கடுமையான என்செபாலிடிஸ், கடுமையான மந்தமான பக்கவாதம், மஞ்சள் காமாலை குறித்தும் தகவல்கள் சேகரிப்பட்டு அந்த அறிக்கை தினசரி IHIP போர்ட்டலில் அப்டேட் செய்யப்பட வேண்டும்.
ஆபத்து மருந்துகள், நோய் கண்டறிதல், பூச்சிக்கொல்லிகள், உபகரணங்கள் போன்றவற்றை சரியான முறையில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், கொசு உருவாவதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.