NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'நாளை பாஜக அலுவலகத்திற்கு வருகிறேன்': தனது உதவியாளர் கைதுக்கு பின் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'நாளை பாஜக அலுவலகத்திற்கு வருகிறேன்': தனது உதவியாளர் கைதுக்கு பின் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம் 

    'நாளை பாஜக அலுவலகத்திற்கு வருகிறேன்': தனது உதவியாளர் கைதுக்கு பின் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம் 

    எழுதியவர் Sindhuja SM
    May 18, 2024
    06:28 pm

    செய்தி முன்னோட்டம்

    தனது உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் "ஜெயில் பரோ" போராட்டத்தை அறிவித்துள்ளார்.

    நாளை பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைமையகத்தில் மதியம் 12:00 மணியளவில் அனைத்து ஆம் ஆத்மி கட்சி(ஏஏபி) தலைவர்களும் கலந்துகொள்ளும் வகையில் போராட்டம் நடைபெறும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    மே 13 ஆம் தேதி முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தில் தன்னைத் தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறியதைத் தொடர்ந்து பிபவ் குமாரை டெல்லி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    டெல்லி 

    "நாங்கள் என்ன தவறு செய்தோம்?": டெல்லி முதல்வர்

    இந்நிலையில், இது குறித்து பேசி இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், "அவர்கள் ஆம் ஆத்மி கட்சியை குறிவைக்கிறார்கள் என்பது இப்போது தெளிவாக தெரிகிறது. சஞ்சய் சிங்கை சிறையில் அடைத்தனர். இன்று என்னுடைய பிஏ-வை(பிபவ் குமார்) கைது செய்தனர். ராகவ் சதா லண்டனில் இருந்து திரும்பியுள்ளார்; சிலர் ராகவ் சதாவையும் கைது செய்ய இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அதற்கு பிறகு இங்கே அதிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் மட்டுமே உள்ளனர்" என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    "நாங்கள் என்ன தவறு செய்தோம்? அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தியதுதான் எங்கள் குற்றமா?" என்று டெல்லி முதல்வர் கேள்வி எழுப்பினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்
    ஆம் ஆத்மி

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    டெல்லி

    "உச்சநீதிமன்றத்தில் இருந்து கூட ஜாமீன் கிடைக்கவில்லை': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி பிரதமர் மோடி
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அரவிந்த் கெஜ்ரிவால்
    திஹார் ஜெயிலில் டெல்லி முதல்வரின் முதல் நாள் எப்படி கழிந்தது? அரவிந்த் கெஜ்ரிவால்
    தண்ணீர் சறுக்கில் விளையாடிய 25 வயது நபர் பலி: நொய்டாவில் பரிதாபம்  நொய்டா

    அரவிந்த் கெஜ்ரிவால்

    கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உயர்நீதிமன்றத்தில் மனு: உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை  டெல்லி
    ED காவலில் இருந்து கொண்டே தனது முதல் உத்தரவை பிறப்பித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இன்று பெரும் போராட்டம்  டெல்லி
    கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிர்ப்பு: மாபெரும் பேரணியை நடத்த 'இண்டியா' கூட்டணி கட்சிகள் முடிவு  டெல்லி

    ஆம் ஆத்மி

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்  டெல்லி
    ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி ராகவ் சத்தாவின் இடைநீக்கம் ரத்து நாடாளுமன்றம்
    எம்பி ராகவ் சத்தா ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா தலைவராக நியமனம் டெல்லி
    அமலாக்கத்துறையின் 3வது சம்மனையும் புறக்கணித்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025