குடியுரிமை சட்டத்திற்கு கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டது
செய்தி முன்னோட்டம்
குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்நத இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்க அனுமதிக்கும் ஒரு சட்டமாகும்.
அண்டை நாட்டில் துப்புறுத்தப்படும் சிறுபான்மையினர்களான இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், இந்த சட்டத்தின் மூலம் இலங்கை தமிழர்கள் பயனடைய முடியாது.
அதனால், இந்த சட்டம் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு எதிரானது என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த சட்டம் பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மிக முக்கிய சட்டமாகும்.
இந்தியா
மத்திய உள்துறை செயலாளர் குடியுரிமைச் சான்றிதழை வழங்கினார்
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன் இந்த சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.
டிசம்பர் 31, 2014 க்கு முன் இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த முஸ்லீம் அல்லாத குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கும் இந்த சட்டத்தின் கீழ் விண்ணப்பத்திற்கான தகுதி காலம் 11 லிருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை செயலாளர் ஸ்ரீ அஜய் குமார் பல்லா இன்று டெல்லியில் விண்ணப்பித்தவர்களுக்கு குடியுரிமை சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் செயலர், இயக்குநர் (IB), இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.