வீடியோ: பெங்களூரில் ஒரு பெண்ணை மடியில் வைத்துக்கொண்டு பைக் ஓட்டிய வாலிபரை வலைவீசி பிடித்த காவல்துறை
பெங்களூரில் உள்ள மேம்பாலத்தில் ஒரு பெண்ணை மடியில் வைத்துக்கொண்டு பைக்கில் வாலிபர் ஒருவர் ஆபத்தான முறையில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வைரலான வீடியோவை கவனித்த போலீசார் அந்த பைக்கில் சென்ற இருவரையும் கண்டுபிடித்தனர். தேதி குறிப்பிடப்படாத அந்த கிளிப்பில், ஒரு பெண் பைக் ஓட்டுபவரின் மடியில் ஒருபக்கமாக அமர்ந்திருப்பதும், அவரது கழுத்தில் கைகளை வைத்து கட்டிபிடித்திருப்பதும் நன்றாக தெரிகிறது.
வாலிபர் மற்றும் பெண்ணை கண்டுபிடித்த போலீசார்
வடக்கு பெங்களூரில் உள்ள ஹெப்பல் மேம்பாலத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பெங்களூரு போக்குவரத்து போலீசார் பைக்கின் நம்பர் பிளேட் மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த வாலிபர் மற்றும் பெண்ணை கண்டுபிடித்தனர். "குற்றவாளியைக் கண்டுபிடித்துள்ளோம். அவர் முன்பு செய்த விதிமீறல்களின் பட்டியலை நாங்கள் கண்டுபிடிப்போம்" என்று வடக்கு, பெங்களூரு போக்குவரத்து டிசிபி என்று கூறியுள்ளார்.