
குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நெல்லை சிறுவன்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது.
அதனால் அங்கே குளிக்க தடை விதிக்கப்பட்டது.
ஆனாலும் சுற்றுலாவாசிகள் அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி, அருவிகளில் குளித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அங்கு குளித்துக் கொண்டிருந்த சிலர் வெள்ளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதில், நெல்லையைச் சேர்ந்த 17 வயதான அஸ்வின் என்ற சிறுவன் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளார்.
செய்தி அறிந்ததும் அங்கே விரைந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர், அவனை தேடும் பணியில், தீயணைப்புத் துறையினரை முடுக்கி விட்டுள்ளனர்.
embed
குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு
#WATCH | தென்காசி பழைய குற்றால அருவியில் மக்கள் குளித்துக்கொண்டிருந்தபோது திடீர் வெள்ளப்பெருக்கு.. அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்..! வெள்ளத்தில் திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டார். அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணியில்... pic.twitter.com/TNzXIvXkCu— Sun News (@sunnewstamil) May 17, 2024
embed
சிறுவனை தேடும் பணி தீவிரம்
Watch | தென்காசி பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய, நெல்லையைச் சேர்ந்த 16 வயது சிறுவனை தேடும் பணி தீவிரம்.. மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் எஸ்.பி. சுரேஷ் குமார் நேரில் ஆய்வு. வெள்ளத்தில் சிறுவன் அடித்துச் செல்லப்பட்டது எப்படி என உடன் வந்த... pic.twitter.com/ST9EvIE2HS— Sun News (@sunnewstamil) May 17, 2024