மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, வரும் ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம். முன்னதாக செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனு, கடந்த மே 6-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. ஆனால், அப்போது அமலாக்கத் துறையினர் தரப்பில் எதிர் வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை மே 15-க்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று இவ்வழக்கின் விசாரணையின் போது, EDயின் வழக்கறிஞர் ஆஜராததால், இவ்வழக்கு இன்றைய தேதி ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இன்றும் வழக்கறிஞர் ஆஜராகாத நிலையில், இந்த வழக்கை ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு
#BREAKING || பண மோசடி வழக்கில் ஜாமின் கோரும் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்#SenthilBalaji #supremecourtorder pic.twitter.com/ztR6zy8zbn— Thanthi TV (@ThanthiTV) May 16, 2024