Page Loader
ஆம் ஆத்மி கட்சியை நசுக்கப் பார்க்கிறார் பிரதமர் மோடி: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சியை நசுக்கப் பார்க்கிறார் பிரதமர் மோடி: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

எழுதியவர் Sindhuja SM
May 19, 2024
01:17 pm

செய்தி முன்னோட்டம்

ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்க பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஆபரேஷன் ஜாது என்பதை தொடங்கியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று குற்றம் சாட்டியுள்ளார். ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தை நோக்கி இன்று பேரணியாகச் சென்றபோது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். ராஜ்யசபா எம்பி ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் பாஜக அலுவலகம் நோக்கி பெரும் பேரணி நடைபெற்று வருகிறது.

டெல்லி 

பாஜக தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் 144தடை உத்தரவு 

இதனையடுத்து, பாஜக அலுவலகத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, ஆம் ஆத்மி தனது மெகா போராட்டத்திற்கு அனுமதி கோரவில்லை. எனவே, பாஜக அலுவலகம் அமைந்துள்ள டிடியு மார்க்கில் சிஆர்பிசியின் 144 பிரிவு விதிக்கப்பட்டுள்ளது. பாஜக அலுவலகத்திற்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் தலைவர்களிடம் உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், "பாஜகவும், பிரதமர் மோடியும் 'ஆபரேஷன் ஜாது'வை தொடங்கியுள்ளனர். நாங்கள் பெரிதாக வளர்ந்து அவர்களுக்கு சவாலாக மாறக்கூடாது என்பதால், 'ஆபரேஷன் ஜாது' மூலம் ஆம் ஆத்மியின் பெரிய தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். வரும் நாட்களில் ஆம் ஆத்மியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.