அமேதி, ரேபரேலி உள்ளிட்ட 49 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்
7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 49 தொகுதிகளில் நடைபெறும் இந்த 5ஆம் கட்ட தேர்தலில் ராகுல்காந்தி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று நடைபெறும் 49 தொகுதிகளுக்கான தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் அமேதி, ரேபரேலி உள்ளிட்ட 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஒடிசாவில் 5 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி, லடாக் என மொத்தம் 49 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
5ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு
#BREAKING || 5ம் கட்டத் தேர்தல் - 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு துவக்கம்#electionswiththanthitv #elections2024 pic.twitter.com/YYiJP6q8YZ— Thanthi TV (@ThanthiTV) May 20, 2024