தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்; சென்னையில் மருத்துவக்கல்லூரி மாணவன் தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகிறது. இந்த சூழலில், சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்த தனுஷ் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனுஷ் ஒரு பிசியோதெரபி மாணவர். அவர், ஆன்லைன் ரம்மியில் அதிகளவில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. எனினும் தொடர்ந்து விளையாடி இழந்த பணத்தை மீட்க தந்தையிடம் ரூ.24,000 கேட்டுள்ளார் தனுஷ், ஆனால் அவரின் தந்தை ரூ.4,000 மட்டுமே கொடுத்த நிலையில், விரக்தியடைந்த தனுஷ் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட தற்கொலை
#JUSTIN || சென்னை கொருக்குப்பேட்டையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு த*கொலை கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்த தனுஷ், பிசியோதெரபி 3ம் ஆண்டு படித்து வந்தார் ஆன்லைன் ரம்மியில் ஆர்வமாக இருந்த தனுஷ் அதிகளவில் பணத்தை இழந்ததாக தகவல் தொடர்ந்து... pic.twitter.com/bJxscgrIHu— Thanthi TV (@ThanthiTV) May 16, 2024