சர்வதேச அளவில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட கேரள நபர் கைது
செய்தி முன்னோட்டம்
கேரளாவில் உள்ள எர்ணாகுளம் ஊரக காவல்துறையினர், உடல் உறுப்பு விற்பனைக்காக சர்வதேச அளவில் ஆள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் சபித் நாசர் என்ற நபரை கைது செய்துள்ளனர்.
திருச்சூரில் உள்ள வாலாபாட்டைச் சேர்ந்த 30 வயது நபர் சபித் நாசர் ஆவார்.
இவர் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஈரானில் இருந்து குவைத் வழியாகத் திரும்பிக் கொண்டிருந்த நாசர் குடிவரவுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
நாசர், IPC 370 (மனித கடத்தல்) மற்றும் மனித உறுப்புகள் விற்றல் சட்டத்தின் பிரிவு 19 (மனித உறுப்புகளை வணிக ரீதியாக கையாளுதல்) ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கேரளா
உடல் உறுப்பு கடத்தல் குறித்து விசாரணை நடந்து வருகிறது
இந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அவரது தொலைபேசியில் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக எர்ணாகுளம் ஊரக எஸ்பி வைபவ் சக்சேனா உறுதிப்படுத்தினார்.
"பணத்தை பெற்றுகொண்டு உடல் உறுப்புகளை தானம் செய்வது சட்டப்பூர்வமானது என்று நம்ப வைத்து மக்களை அவர் கவர்ந்து இழுத்ததை நாங்கள் முதன்மையாக புரிந்துகொள்கிறோம்... இதற்கு எங்களிடம் டிஜிட்டல் ஆதாரம் உள்ளது" என்று எஸ்பி வைபவ் சக்சேனா கூறினார்.
இந்த சர்வதேச உடலுறுப்பு கடத்தல் நடவடிக்கையில் நாசர் ஈடுபட்டதாகக் கூறப்படும் முழு அளவிலான தொடர்புகளை வெளிக்கொணர போலீசார் இப்போது வழக்கை ஆழமாக ஆராய்ந்து வருகின்றனர்.