NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடகாவில் காதலிக்க மறுத்த பக்கத்து வீட்டு பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றவர் தப்பி ஓட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடகாவில் காதலிக்க மறுத்த பக்கத்து வீட்டு பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றவர் தப்பி ஓட்டம் 

    கர்நாடகாவில் காதலிக்க மறுத்த பக்கத்து வீட்டு பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றவர் தப்பி ஓட்டம் 

    எழுதியவர் Sindhuja SM
    May 15, 2024
    04:30 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகாவின் ஹுப்பாலியில் வசித்து வந்த 20 வயது பெண் ஒருவர் அண்டை வீட்டு காரரின் காதலை மறுத்ததால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

    அஞ்சலி அம்பிகேரா இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​21 வயதான கிரிஷ் சாவந்த் என்பவர் அவரது வீட்டிற்குள் நுழைந்து அஞ்சலியை கத்தியால் பலமுறை குத்தியதாகக் கூறப்படுகிறது.

    சாவந்த் தற்போது தலைமறைவாக உள்ளதால், போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    கிரீஷ் தன்னை காதலிக்குமாறு அஞ்சலியை வற்புறுத்தி வந்தார். ஆனால் அஞ்சலியை அதை மறுத்துவிட்டார். அதனால் கோபடைந்த கிரீஷ், அஞ்சலியை கத்தியால் குத்தி கொன்றார்.

    போலீசார், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று, அவரது உடலை மீட்டனர்.

    இந்தியா 

    குற்றவாளியைப் பிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது

    பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை எடுத்துச் செல்லும்போது அவரது உறவினர்கள் கதறி அழும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ஹுப்பாலி-தர்வாட் காவல்துறைத் தலைவர் கோபால் பியாகோட், வீரப்பூர் ஓனி கிராமத்தில் இந்த கொலை நடந்ததாகக் கூறியுள்ளார்.

    "இந்த சோகமான சம்பவத்தின் பின்னணியைக் கண்டறிய நாங்கள் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறோம். குற்றவாளியைப் பிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

    ஒரு மாதத்திற்கு முன், இதே ஹுப்பாலி மாவட்டத்தில் தான் 23 வயதான நேஹா ஹிரேமத் தனது முன்னாள் வகுப்புத் தோழனான ஃபயாஸ் கோண்டுநாயக்கால் கல்லூரி வளாகத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் கொலை செய்யப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    கொலை

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    கர்நாடகா

    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி மூலம் ஆலோசனை தமிழ்நாடு
    ஹிஜாப் அணிவதற்கான தடையை நீக்க இருப்பதாக அறிவித்தது கர்நாடக அரசு காங்கிரஸ்
    ஹிஜாப் தடையை நீக்குமா கர்நாடகா? மாநில உள்துறை அமைச்சர் கூறிய முக்கிய தகவல்  சித்தராமையா
    கடைகளின் சைன்போர்டுகளில் கன்னடா கட்டாயம்: கலவர பூமியான பெங்களூர் வீதிகள் பெங்களூர்

    கொலை

    டெல்லியில், ₹350க்காக 18 வயது வாலிபர், சிறுவனால் 60 முறை குத்திக்கொலை டெல்லி
    ஜார்ஜ் ஃப்லாய்ட்டை கொன்ற குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்ற முன்னாள் காவல் அதிகாரி, கத்தியால் குத்தப்பட்டார் அமெரிக்கா
    சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை  டெல்லி
    உக்ரைன் உளவுத்துறை தலைவரின் மனைவிக்கு விஷம் வைத்து கொல்ல திட்டம்? உக்ரைன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025