சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா அருகே பிக்-அப் வாகனம் கவிழ்ந்ததால் 18 பேர் பலி
சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டத்தில் பிக் அப் வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 14 பெண்கள் உட்பட 18 பேர் இறந்தனர். மேலும், நான்கு பேர் காயமடைந்தனர் என்று இன்று காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். குக்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஹ்பானி கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் டெண்டு இலைகளைப் பறித்துவிட்டு காட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் சென்ற வாகனம் சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்தது. எச்சரிக்கையை அடுத்து, ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.