தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை; தயார் நிலையில் மீட்பு குழுவினர், மருத்துவ பணியாளர்கள்
கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து வருகிறது. கத்திரி வெயில் முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், கனமழையால் தமிழகத்தின் வெப்ப நிலை குறைந்துள்ளது. இந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இயற்கை பேரிடர்களை சமாளிக்க, மருத்துவக்குழுவினரும், மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை
#BREAKING || சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு =வானிலை ஆய்வு மையம் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு கடலூர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு காலை 10 மணி வரை... pic.twitter.com/Br0aQfRk10— Thanthi TV (@ThanthiTV) May 20, 2024