Page Loader
20 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

20 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

எழுதியவர் Sindhuja SM
May 18, 2024
05:39 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகம்: தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, மே 18 தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: ஈரோடு, சேலம், நாமக்கல்,கரூர், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி,கிருஷ்ணகிரி, தூத்துக்குடி,இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தேனி,திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மே 19 தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 தமிழகம்

மே 19 

அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர்,கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி,இராமநாதபுரம், மதுரை,சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.