இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

15 May 2024

தமிழகம்

14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே,

15 May 2024

தற்கொலை

சச்சின் டெண்டுல்கரின் காவலாளி தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை 

கிரிக்கெட் ஜாம்பவான் பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாநில ரிசர்வ் போலீஸ் படை வீரர்(எஸ்ஆர்பிஎஃப்) ஜாம்னர் நகரில் உள்ள அவரது சொந்த வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

ராஜஸ்தான் சுரங்கத்தில் லிப்ட் சரிந்து விழுந்ததால் மூத்த விஜிலென்ஸ் அதிகாரி பலி

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள கோலிஹான் சுரங்கத்தில் நேற்று இரவு லிப்ட் சரிந்து விழுந்ததில் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த விஜிலென்ஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

15 May 2024

இந்தியா

பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு பதிலளித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் 

10 ஆண்டுகளுக்கு ஈரானில் சபஹர் துறைமுகத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா சமீபத்தில் கையெழுத்திட்டது.

15 May 2024

டெல்லி

 "கைதுக்கான காரணங்கள் வழங்கப்படவில்லை": நியூஸ்கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

நியூஸ் கிளிக் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸார் கைது செய்தது சட்டவிரோதமானது என்று கூறி அவரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் சுரங்கத்தில் இருந்த லிப்ட் இடிந்து விழுந்து விபத்து:  இரவோடு இரவாக 14 பேர் மீட்பு 

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டின் கோலிஹான் சுரங்கத்தில் நேற்று இரவு லிப்ட் சரிந்து விழுந்ததில் கொல்கத்தா விஜிலென்ஸ் குழு உறுப்பினர்கள் உட்பட 14 பேர் மீட்கப்பட்டனர்.

மஞ்சள் காய்ச்சல் எதிரொலி: 3 அரசு மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் 

இரு தினங்களுக்கு முன்னர், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் அனைவரும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

14 May 2024

டெல்லி

டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து: மூச்சுத் திணறி ஒருவர் பலி 

டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலக கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சு திணறி ஒருவர் உயிரிழந்தார்.

நாய் கடித்து குதறியதால் தெலுங்கானாவில் 5 மாத குழந்தை பலி

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள தந்தூரில் இன்று ஒரு ஐந்து மாத குழந்தையை நாய் கடித்து கொன்றது.

14 May 2024

சென்னை

சென்னை: பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ மூன்றுக்கும் ஒரே டிக்கெட் திட்டம்

விரைவில் சென்னையில் உள்ள பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

14 May 2024

தமிழகம்

8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

14 May 2024

டெல்லி

டெல்லி மதுபான கொள்கை வழக்கு: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் நீதிமன்ற காவல் மே 20 வரை நீட்டிப்பு 

டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கியது செய்யப்பட்ட பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதாவின் நீதிமன்ற காவலை மே 20 வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

14 May 2024

டெல்லி

 'டெல்லி மதுபான வழக்கில் ஆம் ஆத்மி கட்சி குற்றவாளியாக அறிவிக்கப்பட உள்ளது': அமலாக்கத்துறை 

டெல்லி மதுக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அமலாக்க இயக்குநரகம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தது.

14 May 2024

டெல்லி

200 விமானங்களில் பயணித்து பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த நபர் கைது 

110 நாட்களாக 200 விமானங்களில் பயணித்து பல்வேறு பயணிகளின் கைப்பைகளில் இருந்து நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை திருடிய 40 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் நேற்று தெரிவித்தனர்.

14 May 2024

இந்தியா

வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் கங்கை நதியில் பிரதமர் மோடி பிரார்த்தனை 

2024 மக்களவைத் தேர்தலுக்கு வாரணாசி தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

14 May 2024

சென்னை

சென்னை, மதுரை நகரங்களில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிப்பு

தமிழகத்தில் தொடர்ந்து வெப்ப சலனம் நீடித்து வருகிறது. அதன் உச்சகட்டமாக கடந்த 4ஆம் தேதி முதல் கத்தரி வெயிலும் தொடங்கியது.

14 May 2024

மும்பை

மும்பை விளம்பர பதாகை விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

மும்பையில் நேற்று மாலை வீசிய கடுமையான புயலின் போது ஒரு பெரிய விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14 பேர் இறந்தனர் மற்றும் 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

14 May 2024

பாஜக

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி நேற்று இரவு காலமானார்

பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சுஷில் மோடி, தனது 72வது வயதில் காலமானார்.

13 May 2024

மும்பை

வீடியோ: மும்பையை கதிகலங்க வைத்த புழுதிப் புயல், கனமழை 

மும்பையில் இன்று புழுதிப் புயல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதி வழங்கவில்லை: ராஜ் பவன் விளக்கம்

நேற்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்ததாக செய்திகள் வெளியான நிலையில், இன்று அந்த செய்தி தவறு என்று மறுத்துள்ளது ஆளுநர் மாளிகை.

10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கூறிய காரணங்கள் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

13 May 2024

கனடா

'விசாரணைக்கு தகுதியான எதையும் கனடா அனுப்பவில்லை': நிஜ்ஜார் வழக்கு குறித்து பேசிய எஸ் ஜெய்சங்கர்

காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் கனடா நான்காவது நபரை கைது செய்திருக்கும் நிலையில், அது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியுள்ளார்.

முஸ்லீம் பெண்களிடம் முகத்தை காட்டுமாறு கூறிய பாஜக வேட்பாளர் மீது வழக்கு பதிவு 

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் கொம்பெல்லா மாதவி லதா, வாக்குச் சாவடியில் பர்தா அணிந்திருந்த முஸ்லிம் பெண்களிடம், தங்களின் முகத்தை காட்ட சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.

13 May 2024

ஆந்திரா

வாக்காளர் கன்னத்தில் அறைந்த ஜெகன் மோகன் ரெட்டி கட்சி எம்.எல்.ஏ: பதிலுக்கு அடி விழுந்ததால் பரபரப்பு 

ஆந்திரா: குண்டூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று காலை சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வாக்காளரை அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஷெனாய் இசை, ரோடு ஷோ என களைகட்டிய வாரணாசி: பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல்

ஒரு சிறப்பு ஷெஹ்னாய் இசை, நாட்டுப்புற இசை, காசியின் பிரபலங்களை பற்றி போற்றும் பாடல்கள், பேண்ட் வாத்தியங்கள்- பிரதமர் நரேந்திர மோடி, 2024 லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுவை மே 14 அன்று தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக, இன்று வாரணாசியில் அவரது ஐந்து கிலோமீட்டர் தூர ரோடு ஷோ நடைபெறவுள்ளது.

'கோவை சிறையில் கொல்லப்படுவேன்': கதறிய சவுக்கு சங்கர் 

பெண் காவலர்களை அவதூறாக விமர்சித்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர், தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: 87.98% மாணவர்கள் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் தேர்ச்சி

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

பள்ளிகளை குறி வைத்து மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்; இம்முறை ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பட்டுள்ளது

இன்று காலை, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள குறைந்தது நான்கு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, பள்ளியிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவுக்கு வெப்ப அலை எச்சரிக்கை 

மே 16 ஆம் தேதி மேற்கு ராஜஸ்தான், மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஹரியானா உட்பட வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளை ஒரு புதிய வெப்ப அலை தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது.

தமிழகத்தை தாக்கும் கோடை வெயில்; உயரும் காய்கறிகளின் விலைகள்

இந்தியா முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.

நாகப்பட்டினம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி செல்வராசு காலமானார்

நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான எம்.செல்வராசு இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 67.

13 May 2024

தேர்தல்

4-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: ஸ்ரீநகர் உட்பட 10 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு 

7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் இன்று 4 -ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

12 May 2024

டெல்லி

டெல்லியில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு படைகள் குவிப்பு 

டெல்லியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

12 May 2024

தமிழகம்

10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழ்நாடு: தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே,

12 May 2024

இந்தியா

இலவச மின்சாரம், சீனாவிடமிருந்து நிலத்தை மீட்பது உட்பட அரவிந்த் கெஜ்ரிவாலின் 10 தேர்தல் வாக்குறுதிகள் 

ஆம் ஆத்மி கட்சிக்காக(ஏஏபி) இன்று பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 10 உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார் .

கர்நாடகா: 3 பேரை கடத்தி அவர்களது அந்தரங்க உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்திய கும்பல் 

கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டத்தில் 3 பழைய கார் டீலர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12 May 2024

கேரளா

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருந்து குதிக்கப் போவதாக மிரட்டிய கேரள நபர் கைது 

துபாய் - மங்களூரு இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த கேரளாவைச் சேர்ந்த ஒருவர் விமானத்தில் இருந்து குதிக்கப்போவதாக விமான பணியளர்களை மிரட்டியதால் கைது செய்யப்பட்டார்.

12 May 2024

கனடா

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் நான்காவது சந்தேக நபர் கைது

ஜூன் 2023 இல் சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் நான்காவது நபரைக் கைது செய்ததாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின்(BC) ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழு(IHIT) அறிவித்துள்ளது.

11 May 2024

இந்தியா

'மோடிக்கு 75 வயது ஆனாலும் அவர் தான் பிரதமராக வருவார்': அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதில்

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

11 May 2024

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழ்நாடு: தென்னிந்திய பதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே,