நாகப்பட்டினம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி செல்வராசு காலமானார்
நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான எம்.செல்வராசு இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 67. சிறுநீரக பாதிப்பு காரணமாக மாற்று சிறுநீரகம் பொருத்திக்கொள்ளும் சிகிச்சையை மேற்கொண்டு வந்த செல்வராசு, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது உடல், சென்னையில் இருந்து அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்றும், நாளை காலை 10 மணியளவில், அவரது இறுதிச் சடங்கு சித்தமல்லி கிராமத்தில் நடைபெறும் எனவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. அவரின் மறைவிற்கு, இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Twitter Post
#NewsUpdate | மறைந்த செல்வராஜ் எம்.பி-யின் இறுதிச் சடங்கு சித்தமல்லி கிராமத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு!#SunNews | #Selvaraj | #Nagapattinam https://t.co/TL3zK5Sk1f pic.twitter.com/zFfFDID70e— Sun News (@sunnewstamil) May 13, 2024