Page Loader
வீடியோ: மும்பையை கதிகலங்க வைத்த புழுதிப் புயல், கனமழை 

வீடியோ: மும்பையை கதிகலங்க வைத்த புழுதிப் புயல், கனமழை 

எழுதியவர் Sindhuja SM
May 13, 2024
06:19 pm

செய்தி முன்னோட்டம்

மும்பையில் இன்று புழுதிப் புயல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், கோரேகான் உள்ளிட்ட நகரத்தின் சில பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்தது. மும்பை, நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்த சில நிமிடங்களில் இப்படி ஒரு கனமழை பெய்ய தொடங்கியது. அடுத்த 4 மணி நேரத்திற்கு மும்பை மாவட்டத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் வானிலை மையம் அறிவுறுத்தி இருந்தது. டெல்லி-என்சிஆர் பகுதியில் மே 10ஆம் தேதி இடியுடன் கூடிய பெரும் புழுதிப்புயல் ஏற்பட்டது. இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் மொத்தம் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

மும்பையை கதிகலங்க வைத்த புழுதிப் புயல்