
தமிழகத்தை தாக்கும் கோடை வெயில்; உயரும் காய்கறிகளின் விலைகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியா முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.
இதனால் சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விலை மார்க்கெட்டில் விலைகளில் பெறும் ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக பீன்ஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 22 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 48 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 200 முதல் 230 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 110 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அவரைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 முதல் 70ரூபாய்க்கும்,கொத்தவரங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ட்விட்டர் அஞ்சல்
உயர்ந்த காய்கறிகளின் விலை
#NewsUpdate | சென்னை: கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை 2 மடங்காக உயர்ந்ததால் மக்கள் வேதனை!
— Sun News (@sunnewstamil) May 13, 2024
🔪 1 கிலோ பீன்ஸ் ₹200 - ₹230க்கு விற்பனை!
🔪 1 கிலோ பச்சை மிளகாய் ₹ 70க்கு விற்பனை!
🔪 1 கிலோ அவரைக்காய் ₹90 - ₹110க்கு விற்பனை!
🔪 1 கிலோ கேரட் ₹50 - ₹70க்கு விற்பனை!
🔪 1… pic.twitter.com/7VxlpJfMDD