NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு படைகள் குவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு படைகள் குவிப்பு 

    டெல்லியில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு படைகள் குவிப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    May 12, 2024
    06:05 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    புராரி அரசு மருத்துவமனை மற்றும் மங்கோல்புரியில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி தீயணைப்பு துறையில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

    டெல்லியில் உள்ள மங்கோல்புரியில் உள்ள புராரி அரசு மருத்துவமனை மற்றும் சஞ்சய் காந்தி மருத்துவமனை ஆகியவற்றிலிருந்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக அந்தத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதனையடுத்து, அப்பகுதியில் விசாரணை நடந்து வருகிறது.

    டெல்லி 

    டெல்லியில் உள்ள 100 பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் 

    மே 1 ஆம் தேதி டெல்லியில் உள்ள 100 பள்ளிகளுக்கும், நொய்டாவில் இரண்டு பள்ளிகளுக்கும், லக்னோவில் உள்ள ஒரு பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டது.பின்னர் அது புரளி என்று தெரியவந்தது.

    ரஷ்ய மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தி அந்த அச்சுறுத்தல்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன.

    வெடிகுண்டு மிரட்டல் வந்த அனைத்து பள்ளிகளிலும் முழுமையான சோதனை நடத்தியதாகவும், எதுவும் கிடைக்கவில்லை என்றும் டெல்லி போலீசார் அப்போது கூறினர்.

    ஏப்ரல் 30 ஆம் தேதி சில மருத்துவமனைகளுக்கும் இதே போன்ற மின்னஞ்சல்கள் வந்ததாக டெல்லி காவல்துறை (குற்றம்) சிறப்பு சிபி ரவீந்தர் யாதவ் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    வெடிகுண்டு மிரட்டல்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டெல்லி

    கெஜ்ரிவால் கைது விவாகரத்தில் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியதை அடுத்து அமெரிக்கா ரியாக்ஷன் அரவிந்த் கெஜ்ரிவால்
    "ED என்னை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும். இது ஒரு மோசடி": நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல், ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி கட்சிகள் போராட்டம்: மத்திய டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது அரவிந்த் கெஜ்ரிவால்

    வெடிகுண்டு மிரட்டல்

    பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை தமிழக காவல்துறை
    மீண்டும் சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்; இம்முறை தலைமை செயலகத்திற்கு! சென்னை
    சென்னை, கோவை பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் சென்னை
    பெங்களூரு பள்ளி அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு  பெங்களூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025