Page Loader
10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

எழுதியவர் Sindhuja SM
May 12, 2024
03:54 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு: தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே, மே 12 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர்,ஈரோடு,திருப்பூர்,தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மே 13 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்(மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தமிழகம் 

மே 14

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.