ஷெனாய் இசை, ரோடு ஷோ என களைகட்டிய வாரணாசி: பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல்
ஒரு சிறப்பு ஷெஹ்னாய் இசை, நாட்டுப்புற இசை, காசியின் பிரபலங்களை பற்றி போற்றும் பாடல்கள், பேண்ட் வாத்தியங்கள்- பிரதமர் நரேந்திர மோடி, 2024 லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுவை மே 14 அன்று தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக, இன்று வாரணாசியில் அவரது ஐந்து கிலோமீட்டர் தூர ரோடு ஷோ நடைபெறவுள்ளது. அதில் மினி இந்தியா மற்றும் உத்தரபிரதேச கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக பல விஷயங்கள் இடம்பெறவுள்ளன. நாளை, மே 14ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை காலை 11:40 மணிக்கு பிரதமர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார். இது இந்து பஞ்சாங்கத்தின்படி, 'அபிஜித் மஹுரத்' மற்றும் 'ஆனந்த் யோகம்' ஆகியவற்றின் கீழ் வருவதால் இது நல்ல நேரமாக கருதப்படுகிறது.
பிரதமர் மோடியை வரவேற்க தயாராகும் காசி
மதன்புரா அருகே பாரத ரத்னா உஸ்தாத் பிஸ்மில்லா கானின் குடும்ப உறுப்பினர்களின் ஷெஹ்னாய் இசையோடு 'அப்னி காஷி'க்கு பிரதமர் மோடி வரவேற்க்க உள்ளனர். முன்னாள் எம்பி ராஜேஷ் மிஸ்ரா தலைமையில் பிரதமர் மீது முஸ்லிம் சமூகத்தினர் மலர் மழை பொழிவார்கள். ரோட் ஷோவில் பிரதமர் மோடி தனது தாயின் பாதங்களைத் தொட்டு வணங்கும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கட்சியினை சேர்ந்த அண்டை மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் பல மாநிலங்களின் முக்கியஸ்தர்கள் ஆகியோர் வேட்புமனுத் தேர்வில் பங்கேற்க்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தனது சாலைக் கண்காட்சியில் கலந்து கொள்ள காசி வாசிகளுக்கு வீடு வீடாக அழைப்பு அனுப்பியுள்ளார்.
பெரும் கொண்டாட்டத்தோடு நாமினேஷன் தாக்கல் செய்யவுள்ள மோடி`
இன்று மாலை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சிங் கேட்டில் உள்ள பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பிரதமர் மோடியின் ரோட்ஷோ தொடங்கி, காசி விஸ்வநாதர் கோவிலில் முடிவடையும். வாரணாசியின் வளர்ச்சியின் பழைய மற்றும் புதிய படங்கள் ரோட்ஷோவின் பாதை நெடுகிலும் காட்டப்படும். தவிர காசியின் பிரபலங்களின் படங்களும் இதை இடம்பெறும். இவர்களில் பண்டிட் மதன் மோகன் மாளவியா, பிஸ்மில்லா கான், பண்டிட் கிஷன் மகராஜ், துளசிதாஸ், கபீர் தாஸ் மற்றும் சாந்த் ரவிதாஸ் ஆகியோர் அடங்குவர். மற்றவர்களுக்கு பிரச்சாரம் செய்வதில் இருந்து விலகி பிரதமர் மோடி, தனக்காக வாக்கு சேகரிக்கவுள்ளதால், 5,000க்கும் மேற்பட்ட 'மாத்ரிசக்தி' விளையாட்டு வீரர்களும் ரோட் ஷோவில் ஈடுபடுவார்கள்.