சென்னை, மதுரை நகரங்களில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிப்பு
தமிழகத்தில் தொடர்ந்து வெப்ப சலனம் நீடித்து வருகிறது. அதன் உச்சகட்டமாக கடந்த 4ஆம் தேதி முதல் கத்தரி வெயிலும் தொடங்கியது. இடையிடையே தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் மழை பெய்தாலும், வெப்பத்தின் தாக்கம் குறைந்தபாடில்லை. இத்தகைய சூழலில் கட்டட பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அதிக வெப்ப அலை காரணமாக ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளன. இதனைத்தவிர்க்க, சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில், திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 10 முதல் மாலை 4 வரை அனைத்து வகை திறந்தவெளி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதித்துள்ளது, அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம்.
கட்டுமானப் பணிகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள்
#BREAKING | திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!#SunNews | #Chennai | #TamilNadu | #LabourWelfare pic.twitter.com/YstGi8QF03— Sun News (@sunnewstamil) May 14, 2024