அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதி வழங்கவில்லை: ராஜ் பவன் விளக்கம்
நேற்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்ததாக செய்திகள் வெளியான நிலையில், இன்று அந்த செய்தி தவறு என்று மறுத்துள்ளது ஆளுநர் மாளிகை. இது பற்றி ராஜ் பவனின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் கடிதம் பதிவேற்றப்பட்டுள்ளது. அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா, முத்துராமலிங்க தேவர் பற்றி பொய்யான கருத்துக்களை பேசி பதற்றத்தை ஏற்படுத்த முயன்றதாக அவர் மீது சேலத்தை சேர்ந்த பியூஷ் மானுஷ் புகார் அளித்திருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அளிக்கப்பட்ட இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க சேலம் மாவட்ட ஆட்சியர் ஆளுநரிடம் அனுமதி கோரியிருந்ததாகவும், அவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அண்ணாமலை மீது வழக்குப்பதிவு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாயின.
ஆளுநர் அனுமதி வழங்கவில்லை
ஆளுநர் மாளிகை மறுப்புhttps://t.co/WciCN2SiwX | #Governor | #RNRavi | #Annamalai | #BJP | #RajBhavan | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/deIgcB4ShI— News7 Tamil (@news7tamil) May 13, 2024
ராஜ் பவன் விளக்கம்
ஆளுநர் மாளிகை செய்தி வெளியீடு எண்: 23 pic.twitter.com/BOaocqmbnk— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) May 13, 2024