
டெல்லி மதுபான கொள்கை வழக்கு: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் நீதிமன்ற காவல் மே 20 வரை நீட்டிப்பு
செய்தி முன்னோட்டம்
டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கியது செய்யப்பட்ட பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதாவின் நீதிமன்ற காவலை மே 20 வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இதன் விசாரணை தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த ஆறாவது கூடுதல் குற்றப்பத்திரிகையை பரிசீலித்து வாதங்களை விசாரிப்பதை ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த வெள்ளிக்கிழமை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் கிட்டத்தட்ட 200 பக்க வழக்கு குற்றப்பத்திரிகையை ED தாக்கல் செய்தது.
தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, ஆம் ஆத்மி கட்சி தொடர்புடைய பணமோசடி வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்
டெல்லி
பிஆர்எஸ் கட்சிக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு
டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பணமோசடி நடந்தததாக ஆம்-ஆத்மி தலைவர்களிடம் பல நாட்களாக விசாரணை நடந்து வருகிறது.
மணீஷ் சிசோடியா போன்ற சில முக்கிய தலைவர்கள் இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தென் மாநிலத்தை சேர்ந்த பிஆர்எஸ் கட்சி தலைவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று ED கூறியுள்ளது.
இந்நிலையில், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா மே 15ஆம் தேதி மாலை அமலாக்க இயக்குனரகத்தால்(ED) கைது செய்யப்பட்டார்.