Page Loader
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: 87.98% மாணவர்கள் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் தேர்ச்சி

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: 87.98% மாணவர்கள் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் தேர்ச்சி

எழுதியவர் Sindhuja SM
May 13, 2024
12:23 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இரண்டு வகுப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை வாரியம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவை 2024 cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ சிபிஎஸ்இ இணையதளம் வழியாக பார்த்துக்கொள்ளலாம். கூடுதலாக, cbse.nic.in, cbseresults.nic.in மற்றும் results.cbse.nic.in ஆகிய இணையதளங்களிலும் முடிவுகளைச் சரிபார்க்கலாம். முடிவுகளை அணுக, மாணவர்கள் தங்கள் ரோல் எண், பள்ளி எண் மற்றும் அட்மிட் கார்டு ஐடி ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பெற்றவர்களின் பெயர்களை சிபிஎஸ்இ வெளியிடவில்லை.

இந்தியா 

கடந்த ஆண்டை விட 0.65 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது

மொத்தம் 87.98% மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.65 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. CBSE தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது? 1. http://cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் 2. "Senior School Certificate Examination (Class XII) Results 2024" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும் 3. உங்கள் அட்மிட் கார்டில் கொடுக்கப்பட்டுள்ளபடி உங்கள் ரோல் எண், பள்ளி எண் மற்றும் அட்மிட் கார்டு ஐடி ஆகியவற்றை உள்ளிட வேண்டும். 4. விவரங்களை உள்ளிட்ட பிறகு, சமர்ப்பி என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். 5. உங்கள் தேர்வு முடிவுகள் திரையில் காட்டப்படும். 6.அதை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.